முளைகட்டிய கம்பை வறுத்துப் பொடி செய்து மாவாக்கிப் பயன்படுத்துவது தமிழர்களின் வழக்கம். கம்பு மாவில் நார்ச்சத்து அதிகம்.இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை உணவுக்குப் பயன்படுத்தலாம்.கஞ்சி, அடை, தோசை, இனிப்புப் பண்டம் எனப் பலதரப்பட்ட உணவுகளைத் தயாரிக்கலாம்.

கம்பு மாவில் மாவுச் சத்து, மால்ட்டோஸ், மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகிய சத்துகள் அதிகமாக உள்ளன.குரோமியம், கால்சியம் பீட்டா கரோட்டின் குறைவாக உள்ளன.

வெல்லப்பாகில் கம்பு மாவைக் கலந்து சாப்பிட்டால் இரும்புச் சத்து கூடும்.ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், வளர்ச்சிப் பருவத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைய வயதினர் போன்றோருக்குக் கம்பு மாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மிகவும் உதவும்.