
சமீபகாலமாக பெரும்பாலானவர்கள் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள். அவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும், நோயில் இருந்து நிவாரணம் பெறலாம்.
நெல்லிக்காய் என்று சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயா என்ற கேள்வி உருவாகலாம். பொதுவாக அரி நெல்லி என்று சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை.
நாட்டு நெல்லிக்காய் என்பது எலுமிச்சம்பழம் அளவு பெரிதாக இருக்கும்.வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியவில்லை என்றால் நெல்லிக்காயோடு இஞ்சி சேர்த்து அரைத்து அத்துடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து, சர்க்கரை அல்லது தேவைப்பட்டால் உப்பும் சேர்த்து தண்ணீர் கலந்து குடிக்கலாம். காலையில் தேநீருக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய் இதயத்தை பாதுகாப்பதோடு கொழுப்பைக் கரைக்கும். அத்துடன் ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கும்.கல்லீரல், கணையத்தைப் பாதுகாக்கும்.கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோயையும் குணப்படுத்தும்.

