மருத்துவ குணம் கொண்டதென ஒட்டகப் பால்,கழுதைப் பாலை அதிக விலைக்கு விற்கிறார்கள்.அவற்றில் மருத்துவக் குணம் இருப்பது உண்மைதானா?

மக்களின் அறியாமையும்,தங்கள் பிரச்னைக்கு அதிசயத் தீர்வு எதுவும் கிடைத்துவிடாதா என்ற எண்ணமும்தான் இதற்கெல்லாம் காரணம்.பெரும்பாலான பாலூட்டி இனங்களின் பால்,சில விஷயங்களில் வித்தியாசங்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படைச் சத்துகள் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கும். ‘ஒட்டகப் பாலில் இன்சுலின் இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு அது நல்லது’ என்று சொல்லப்படுகிறது.இது முற்றிலும் தவறு. இன்சுலின் என்பது மிருகங்களின் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன்.

ரத்தத்தில் இருக்கும் இன்சுலின் ஒருபோதும் பாலில் சுரக்காது.அதேபோல ஒட்டகப் பாலுக்கு அப்படி ஒரு தன்மை இருந்தால் அரபு நாடுகளில் சர்க்கரை நோயாளிகள் மிகக்குறைவாக இருப்பார்கள்.ஆனால், உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் இருக்கும் நாடுகளில் அரபு நாடுகளும் உண்டு.

கழுதைப் பாலில் பால் கெட்டுப்போகாமல் தடுக்க இயற்கையாக சில ரசாயனங்கள் இருக்கின்றன.அதனால் சளி போன்ற பிரச்னைகளுக்கு அது மருந்தாகச் சொல்லப்படுகிறது. மற்றபடி மிகப்பெரும் வித்தியாசமெல்லாம் இல்லை.தாய்ப்பாலைத் தவிர மற்ற எல்லாப் பாலையும் அளவோடுதான் அருந்த வேண்டும்.ஒரு சிலர் ஆஹா ஓஹோன்னு சொல்வதை அப்படியே நம்பி ஆயிரக்கணக்கில் பணத்தை இழக்க நேரிடும்.கவனமாக செயல்பட வேண்டும்.