காது கேட்கவில்லை என்றால் அதற்குக் காரணம் இரண்டு இடங்களில் ஏற்படலாம்.ஒன்று, நடுக்காது,மற்றொன்று, உள்காது.நடுக்காதில் நீர் கோத்துக்கொண்டிருந்தால், அடிக்கடி தொற்று ஏற்பட்டால், காதில் சீழ் வடிந்தால்,அங்கு அழற்சி ஏற்பட்டு, எலும்புகள் ஒன்றோடொன்று ஒட்டி உறைந்துவிடும். அவற்றால் அசைய முடியாது.அப்போது சத்தத்தின் அதிர்வுகளை அவை கடத்த முடியாது.இதனால்,சரியாகக் காது கேட்காது. இந்த நிலைமையைச் சரி செய்துவிடலாம்.

சில குழந்தைகளுக்கு உள்காதில் பிறவியிலேயே இழை அணுக்கள் இருக்காது. இதனால் காது கேட்காது. இவர்களுக்கு ‘காக்ளியர் இம்பிளான்ட்’ எனும் கருவியைப் பொருத்தும் நவீன சிகிச்சை கைகொடுக்கிறது. வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் சில நோய்கள், எடுத்துக்கொள்ளும் மருந்துகள்,முதுமை, அதிக இரைச்சல் போன்ற காரணங்களால் இழை அணுக்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது. செவிநரம்பிலும் பாதிப்பு இருக்கலாம்.அப்போதும் காது கேட்காது.

மருத்துவத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் காது கேட்க உதவும் நவீன கருவிகளின்(ஹியரிங் எய்டு) உதவியுடன் நலம் பெறலாம்.எல்லோருடனும் கலந்து பேசி உரையாடலாம், மகிழலாம்.