
காலடியில் கிடக்கும் காயகல்பம் என்று இதைச் சொல்லலாம். இது, ஓமவள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கிளையை ஒடித்துத் தொட்டியில் வைத்தால் போதும். செடி வளர்ந்துவிடும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய மூலிகை.
இதன் இலைகளை வெறும் வாயில் சாப்பிடலாம். தினம் ஒரு இலையைப் பறித்து, தண்ணீரில் கழுவி சாப்பிட்டு வர, சளி பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதன் தண்டுகளை நடவு செய்யாமல் தூக்கிப் போட்டால்கூட தானாக முளைத்துவிடும். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதன் இலையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். அதிக இருமல் காரணமாக உண்டாகும் நெஞ்சுவலியைப் போக்கும் ஆற்றல் கற்பூரவள்ளிக்கு உண்டு. இதை வீடுகளில் மொட்டை மாடி, ஜன்னல், காம்பவுன்டு சுவர் என எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம்.

