அல்சர் குணமாக..
தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். சுத்தமான முருங்கை கீரையை உள்ளங்கையளவு எடுத்து கழுவி விழுதாக்கி புளிக்காத தயிரில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டால் அல்சர், வயிற்று வலி மாயமாகும். பசும்பாலுடன் அன்னாசிப் பழச்சாறு சம அளவு கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைப்பது உறுதி.
அலர்ஜி குணமாக..
வேப்பங்கொழுந்து, துளசி இலை சேர்த்து தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வர குணமாகும்.
அலுப்பு தீர..
மிளகை நெய்யில் வறுத்து, தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர குணம் கிடைக்கும்.
அஜீரணம்
ஒரு வெற்றிலையுடன் 7 மிளகும் சிறிது சீரகமும் சேர்த்து வாயிலிட்டு நன்றாக மென்று விழுங்கிய பின் தண்ணீர் குடித்தால் அஜீரணம் நீங்கி பசி எடுக்கும்.
ஆண், பெண் உணர்ச்சியை தூண்ட..
திராட்சைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். வீட்டிலேயே சொர்க்கம்.
ஆரோக்கிய ரகசியம்
தினசரி காலையில் இஞ்சி சாறு 2 ஸ்பூன், தேன் 2 ஸ்பூன் வெந்நீரில் கலந்து பருக வேண்டும். புதிதாக திருமணமான தம்பதிகளின் முதல் உணவு பாலும், தேனும், பழமும் ஆகும்.
ரத்த அழுத்தம் குணமாக..
ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட வேண்டும்.
கொதித்து ஆறிய நீரில் சீரகப் பொடியை 12 மணி நேரம் ஊற வைத்து குடிப்பது நல்லது. சுண்டை வத்தல் சாப்பிடலாம். தாமரைப் பூவை பொடி செய்து பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
இளமையுடன் வாழ..
தினமும் கால் கரண்டி நெல்லிப்பொடி சாப்பிட்டு வரவும். காலையில் 5 ஆவாரம்பூ மென்று சாப்பிட்டு வரலாம்.
இதயம் பலமடைய
அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட இதயம் பலமாகும்.
ரோஜாப்பூ, கற்கண்டு, தேன் கலந்து வெயிலில் வைத்து தினமும் 1 கிராம் சாப்பிட்டு வர இதயம் பலமாகும். சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிடலாம். ஓரிதழ் தாமரையை பொடி செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். மாதுளம் பழம், நெல்லிக்காய், சந்தனம், ரோஜாப்பூ, கடுக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கள் ஆகியவை இதயத்துக்கு நல்லது.
இரைப்பை குடல்புண்
தினமும் 1 டம்ளர் மாதுளம் பழச்சாறு அருந்தி வர குணம் கிடைக்கும்.
உடல் வீக்கம் போக..
அமுக்கரா கிழங்கை மைபோல் அரைத்து வீக்கத்தின் மேல் பூசினால், வீக்கம் குறையும், மறையும்.
எச்சில் தழும்பு
வெள்ளைப் பூண்டை நசுக்கி தொடர்ந்து தேய்க்க குணமாகும். வெள்ளைப் பூண்டு சாறோடு வெற்றிலை சாறையும் கலந்து தடவலாம்.
ஏப்பம், மலச்சிக்கல், செரிமானக் கோளாறு
இரண்டு ஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூட்டில் குடித்தால் வயிறு இயல்பாகும்.
கண்களில் நீர்வடிதல்
நாவல் பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டு வர கண்களில் நீர் வடிதல் குணமாகும்.
கண்களின் கீழ் கருவளையம்
அரை டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறியில் அரை ஸ்பூன் தக்காளிச் சாறு கலந்து கருவளையத்தில் மட்டும் தொடர்ந்து தடவி வர சில நாட்களில் மறையும். புதினாவை அரைத்து கருவளையத்தில் பூசித் தூங்கினால் மறையும். பாதாம் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து தடவி இதமாக மசாஜ் செய்வதும் நல்லது. இது போல செய்யும்போது கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கால் ஆணி குணமாக..
மருதாணி, மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்டி வர குணமாகும்.
கல்லடைப்புக்கு..
முள்ளங்கிச் சாறு, வாழைத்தண்டு சாறு சேர்த்து 50 மில்லி அளவு குடித்து வர கல் கரையும்.

