டாக்டர் ஜி.ராஜமோகன்,
உளவியல் ஆலோசகர்.

வீட்டிற்கு வெளியே விளையாட அனுமதிக்கப்படும் குழந்தைகள் பொதுவாகவே மிகச் சுறுசுறுப்பாக இருப்பதோடு பெரியவர்களைப் போலல்லாமல் தங்களது ஒவ்வொரு தசையையும் மிகச் சுறுசுறுப்பாக இயக்குவார்கள். ஆரோக்கியமான உடல் என்ற வெளிப்படையான பலனைத் தவிர, குழந்தை ஈடுபடும் ஒவ்வொரு உடல்ரீதியான நட வடிக்கையும் புத்தியிலுள்ள ஒவ்வொரு உயர்ந்த திறனுடன் தொடர் புள்ளது.உதாரணமாக, தவழ்தல் என்பது படிக்கும் திறனுடனும், பிடித்துக்கொண்டு ஏறுதல் என்பது திட்டமிடுவதற்கும் மதிப்பிடுவதற்கும் பிரச்னையைத் தீர்ப்பதற்குமான திறனுடனும் தொடர்புடையவை.

ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரமாவது, குழந்தைகள் வீட்டுக்கு வெளியே விளையாடுவது நல்லது. அந்த விளையாட்டு, கட்டுப்பாடான பயிற்சியாக இருக்கவேண்டியதில்லை… வேடிக்கையான விளையாட்டு அல்லது சுவாரஸ்யமான செயல்களாக இருக்கலாம். குழந்தைகளை உடற்பயிற்சி செய்யவைப்பதற்கு, ஐந்து நிலை களைக்கொண்ட சிறந்த திட்டம் இருக்கிறது.

1.நாம் ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். நாம் சுறுசுறுப்பாக இருப்பதைக் காணும் அக்கணமே, குழந்தைகளும் நம் மோடு சேர்ந்துகொள்வார்கள்.தொடர்ந்து இப்படிச் செய்வது,பின்னர் ஒரு பழக்கமாகவே மாறிவிடும்.நாம் உறங்கிக்கொண்டிருக்கையில்,குழந்தை மட்டும் உடற்பயிற்சி செய்யவேண்டுமென்று எதிர்பார்க்க இயலாது. கண்ணால் பார்ப்பதைக் கொண்டே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். உதாரணமாக, குழந்தையை யோகா வகுப்பில் சேர்த் திருக்கிறோம் என்பதாலேயே,அவள் அந்தப் பயிற்சியை மேற் கொள்ளவேண்டும்,நாம் அதைக் கவனித்தால் போதுமென்று நினைப்பது கூடாது. அவளை உண்மையாகவே ஊக்குவிக்க வேண்டுமென்றால், நாமும் அவளுடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்து, அந்தப் பழக்கத்தை உருவாக்கவேண்டும்.

2.உடற்பயிற்சி என்பதை தண்டனையாக அளிக்காமல்,வேடிக் கையான விளையாட்டுப்போல அமைக்கவேண்டும். உதாரணமாக,நீண்ட தூரம் நடந்துகொண்டேயிருப்பதற்கு பதிலாக, சிறுகுறிப்புகளைக் கொண்ட எளிமையான தேடுதல் விளையாட்டாக (treasure hunt) அதை மாற்றலாம்.

3.உடற்பயிற்சி என்பது, குடும்பம் முழுவதற்குமான வேடிக்கை விளையாட்டாக இருந்தால், ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பங்கேற் கும் வகையில் புதுப்புது விளையாட்டுகளைக் கண்டுபிடித்துச் செயல் படலாம்.

4.குழந்தைகளை அதிகமாகக் கவர்ந்திழுக்கும் மெத்தனமான விஷ
யங்கள் வீட்டுக்குள் இல்லாமலிருந்தால்தான்,அவர்கள் வெளியே செல்ல சம்மதிப்பார்கள். உடற்பயிற்சி வழக்கத்தை சந்தோஷமாகவும், சுவாரஸ்யமான சம்பவங்களைக்கொண்டதாகவும் அமைக்கவேண்டும்.

5. குழந்தைகளுக்கு ஏழு வயதாக இருக்கும்போதே, அவர்களை ஓர் ஒழுங்கான விளையாட்டில் பங்கேற்கச் செய்துவிடவேண்டும்.இது அவர்களை சுறுசுறுப்பாக வைப்பதோடு, விதிமுறைகளைப் பின்பற்றவும், குழுவாக விளையாடவும், வெற்றி- தோல்வி இரண்டையும் சமமாக ஏற்கவும், பின்னாளில் பதின்பருவத்தில் ஏற்படக்கூடிய ஹார் மோன் மாறுதல்களைச் சரிவரக் கையாளவும் கற்றுத்தரும்.

குழந்தைகள் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது, மூளையில் ‘எண்டார்ஃபின்’ சுரப்பதால், ஆரோக்கியமாகவும் தன்னம்பிக்கையுடனும் திகழ்வார்கள். இத்தகைய ‘எண்டார்ஃபின்’, குழந்தைகளின் நோய்எதிர்ப்புசக்தியை வளர்த்து,மகிழ்ச்சியான உணர்வுகளை உருவாக்கி, படைப்பியலுக்கும் பலனுள்ள செயல்பாட்டுக்கும் தேவைப்படும் பல விஷயங்களுக்கும் பொறுப்பாகிறது. முறையான உடற்பயிற்சி, தற்போதைய வாழ்க்கை முறையில் பொதுவாகக் காணப்படும் சிறுவயது உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

வளரும் குழந்தைகளுக்கு, சிறப்பான,சமச்சீரான உணவுச்சத்துகள் தேவை என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.அவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு,உணவுக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தத் தேவையில்லை. ஆரோக்கியமான வாழ்வுமுறைக்கு, அவர்களது உட லுக்குள் சேரும் உணவுச்சத்துகள் சீராக இருப்பதோடு, அவர்களுக்கேற்ற உடற்பயிற்சிகள் முறையாக அமைவதும் அவசியம்.வெளிப்புறத் தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஆரோக்கியமாக, உடல்நலத்துடன், சுறுசுறுப்பாக இருக்கிறார்களா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.