சாப்பிடும் முறையில் இந்த புதிய முறையை முயற்சி செய்து பாருங்கள்.மாதத்தில் இரண்டு நாட்கள் ‘சமைத்த இரவு உணவு’ கிடையாது. அன்று சமையலறைக்கு விடுமுறை.அப்புறம் இரவு சாப்பாட்டுக்கு என் னதான் வழி? ஓட்டலில் வாங்கி சாப்பிடப்போகி றார்களா!என்று நீங்கள் நினைக்கலாம்.

அதுதான் இல்லை. அன்று வீட்டி லுள்ள எல்லோருக்குமே இரவு உணவு முழுக்க முழுக்க பழங்கள் மட் டுமே.அந்த நாட்களில் சமைத்த உணவு அறவே கிடையாது.வீட்டில் எத்தனை பேர் இருக்கி றார்களோ அதற்கேற்ற படி,ஒரு பெரிய பாத்திரத்தில்,பிடித்த, கிடைத்த பழங்கள் அனைத்தையும் சிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு,கொஞ் சம் தேன்விட்டு கலந்து யார் யாருக்கு எவ்வளவு வேண்டுமோ,அவ்வளவு பழங்களை எடுத்து சாப் பிட்டுவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு,படுத்து விட வேண்டியதுதான்.

கிச்சனுக்கும் ‘ரெஸ்ட்’. சமைக்கப்படாத உணவை சாப்பிடுவதால் உணவு மண்டலத்துக்கு ம் ஓய்வு.சமையல் அறையில் தினமும் அல்லாடும் பெண்களுக்கும் ஓய்வு. பழங்கள் மட்டுமே சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் உடலும் லேசாக இருக்கும்.எல்லோரும் முயற்சி செய்து பாருங்களேன்.
-டாக்டர்.எஸ்.அமுதகுமார்.