
டாக்டர்.பி.சௌந்தர்ராஜன், சிறுநீரக சிறப்பு நிபுணர்

உடலில், தேவைக்கு மேல் நிறைந்திருக்கும் உப்பு, புரதம், சர்க்கரை, தாதுக்கள் ஆகியவற்றை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தப் படுத்துவதோடு அல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சக்தியைச் சேமித்து வைக்கும் களஞ்சியமாகவும் செயல்பட்டு வருவது சிறுநீரகங்கள்தான்.
உடலில் உள்ள எலும்புகளின் சீரான வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பதும், இதய நோய்களின் அறிகுறியைக் காட்டும் கண்ணாடியாக இருப்பதும் இந்த சிறுநீரகங்கள்தான்.
சிறுநீரங்கள் சீராக செயல்பட வேண்டும்.செயல் இழந்தால் உடலுக்கு பேராபத்துகள் நிகழும்.
1.சிறுநீர் பரிசோதனை
2. ரத்தத்தில் பூரியா
கிரியாட்டினின் அளவு
3. கிட்னிக்கான அல்ட்ரா சோனாகிராம்
இந்த மூன்று
பரிசோதனைகள் செய்து கொள்வதால் சிறுநீரக நோய்களை ஆரம்ப காலத்திலேயே 90% கண்டுபிடித்துவிடலாம். இவர்களுக்கு எளிதில் ட்ரீட்மென்ட் ஆரம்பித்து நோயைக் படுத்தலாம்.
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி?
1. ‘வெள்ளம் வரும் முன் அணை போடு’ என்ற பழமொழியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது கிட்னி பாதுகாப்புக்கு சொல்லப்பட்டது போன்று இருக்கும்.
சிறுநீரக நோய்க்கு வில்லன்கள் சர்க்கரை, பிளட் பிரஷ்ஷர், உப்புநீர். குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருந்தாலும் சரி, சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தாலும் சரி இவர்கள்
எல்லோரும் முன்னெச்சரிக்கையோடு இருந்தாக வேண்டும்.
சர்க்கரை அளவை 24 மணி நேரமும் முழுக் கட்டுப்பாட்டில்
வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோயின் தன்மையைப் புரிந்து
கொண்டு உணவில் கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள் நீண்டநாள்
வாழும் சாத்தியம் உடையவர்கள்.
2. ஹீமோகுளோபின் சோதனை (HbA1c Test) என்பது நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறிக்கும். ( மூன்று மாத காலமாக சரியான விகிதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வந்ததா… எப்படி, எந்த அளவில் என்பதைத் தெரிவிக்கும் காலக் கண்ணாடிதான் ஹீமோகுளோபின் ஏ1 சி சோதனை) 6.5-க்கு குறைவாக இருக்கவேண்டும். 7-க்கு மேல் அதிகமாக இருந்தால் மோசமான நிலையில்தான் சுகர் இருந்திருக்கிறது என்று அர்த்தம்.
3. உயர் ரத்த அழுத்தம் (High B.P) சிறுநீரகத்தை உடனடியாகத்
தாக்கும். எப்பாடுபட்டேனும் 120/75 அளவில் கட்டுக்குள்
வைத்திருக்க வேண்டும். உணவு, மருந்து, உடற்பயிற்சி ஆகியவற்றின்
மூலம் கட்டுப்படுத்தவேண்டும். High B.P.யை கட்டுப்படுத்துவதின்
மூலம் ஆரம்பகாலத்திலேயே சிறுநீரக நோய்களைத்
தவிர்க்கலாம்.
4. கொலஸ்ட்ரால், இதயத்தை மட்டுமல்ல சிறுநீரகத்தையும் பாதிக்கும். கொழுப்புச் சத்து சேர்வது, புகைபிடித்தல், குடிப்பழக்கம், உடல் பருமன் ஆகியவை சிறுநீரக பாதிப்பை வேகமாக பரவச் செய்யும். குடிப்பழக்கம் கல்லீரலைப் பாதிப்பதோடு சிறுநீரகத்தையும் பாதிக்கிறது.
5.மாற்றுச் சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தும் போது சிறுநீரக நோயாளிகளைக் கவனத்துடன் கையாள வேண்டும். மாற்றுச் சிகிச்சை முறைகளில் மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம் வந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பேரிலும் முறையான கண்காணிப்பின் கீழும் குறிப்பிட்ட மருந்துகளைக் குறிப்பிட்ட காலவரையில் சாப்பிட வேண்டும்.
மாற்று சிகிச்சை முறையில் மருந்துகள் சாப்பிடும்போது உடலில் புதிய அறிகுறிகள் தென்பட்டால் அது அவர்களுக்கு ஒவ்வாமையின் அறிகுறி. குறிப்பாக உடல் அரிப்பு ஏற்படும். கை-கால் திடீர் வீக்கம், சிறுநீர் நிறம் மாறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு திடீரென்று குறைதல் இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டு டாக்டரை அணுகவும். இதனால், ஒவ்வாமையால் வரும் சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்கலாம்.

