ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டும்  என்றவுடனே அனைவரது நினைவிற்கும் முதலில்  வருவது வல்லாரை.  நினைவுத் திறனை அதிகரிக்கும் தன்மை இருப்பதால் ‘யோசனவல்லி’ என்றும் பெயருண்டு.

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு வேளை வல்லாரையை பொறியலாகவோ கூட்டாகவோ சட்னியாகவோ செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். வல்லாரை இலைகளை உலர்த்தி பொடி செய்து வாரத்தில் மூன்று நாள் ஒரு வேளை, அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து கொடுக்க, நினைவாற்றல் அதிகரிக்ககும்