
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.வயது 24.சில நேரங்களில் தாய்ப் பால் சுரக்கிறது.நான் எந்த தப்பும் செய்யவில்லை.இதற்கு மாத்திரை இருக்கிறதா? -பெயர் வெளியிட விரும்பாத புதுச்சேரி வாசகி.
ஒரு சிலருக்கு இப்படி ஏற்படலாம்.பயப்பட வேண்டாம்.இது உங்கள் குற்றம் இல்லை.
புரேலாக்டின் என்கிற ஹார்மோன் பிரச்சனை. புரோலாக்டின் என்பது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கக்கூடிய ஒருவிதமான ஹார்மோன். புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பித்தால், மாதவிலக்கு சுழற்சி முறை தவறும்.உடல் எடை அதிகரிக்கும். கல்யாணமாகாத, கர்ப்பமாகாத பெண்களுக்கு மார்பகங்களில் பால் சுரப்பு இருக்கும். தைராய்டு இருப்பவர்களுக்குப் பெரும்பாலும் இந்தப் பிரச்னையும் இருக்க வாய்ப்புண்டு.
மேற்சொன்ன அறிகுறி கள் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் புரோலாக்டின் ஹார் மோனுக்கான பரிசோதனையைச் செய்து அதன் அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும்.இதன் அளவு 20 வரை இருப்பது நார்மல். அதைத் தாண்டினால் பிரச்னை.சிலருக்கு 200-க்கு மேல் கூட இருப்பதுண்டு. மூளையில் கட்டியோ, அசாதாரண வளர்ச்சியோ இருப்பதுகூட அதற்குக் காரணமாகலாம்.அதை சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இதற்காக வருந்த வேண்டாம்.பெண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

