
கொடி வகையைச் சேர்ந்த தாவரமான தூதுவளை, தேகம் முழுவதும் முட்களைக் கொண்டது. நுரையீரல் சார்ந்த நோய்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதில் தூதுவளை கில்லாடி.ஆஸ்துமா நோயாளிகளிடம் இருக்க வேண்டிய முக்கியமான மூலிகை இது. நுண்ணுயிர்க் கொல்லி (Anti-microbial action) செய்கை கொண்ட தூதுவளை, நோய்க் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. மழைக்காலத்தில் உண்டாகும் சளி, இருமல், காசம், நிரேற்றம் போன்ற நோய்களைக் களையும் தன்மை கொண்டது.
பயன்படுத்தும் முறை
இதன் இலைகளை உலர வைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காய், தக்காளி சட்னிகளால் சலித்துப்போவதற்கு முன்னால் இடையிடையே தூதுவளை இலையையும் சட்னியாக்கிச் சாப்பிடலாம். இலைகளை நீரில் கொதிக்க வைத்துச்
சிறிது மிளகு, உப்பு சேர்த்து ‘சூப்’ செய்தும் பருகலாம். பருப்பு ரசம், தக்காளி ரசம் போன்று, அக்காலத்தில் மழைக்காலத் தூதுவளை ரசம் ரொம்ப பிரசித்தி!

