
DR. SURESH B.D.S.
கரி, உப்பு, மண், செங்கற்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.
தினமும் ஒரு காரட் ஒரு வெள்ளரி சாப்பிட்டால், பல் சுத்தமடைந்து நலமுடன் இருக்கும்.
பற்களில் ஒட்டக்கூடிய சாக்லேட் மிட்டாய், பிஸ்கட் இனிப்புமாவு, சூயிங்கம், ஐஸ்கிரீம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட நேர்ந்தால், உடனே தண்ணீரில் வாயை நன்றாகக் கொப்பளித்துவிட வேண்டும்.
குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.
குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக் கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலைத் தாக்கிப் பற்களையும் சிதைக்கின்றன.
குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால் சிறு வயதிலேயே அதைத் தடுத்துவிட வேண்டும். தவறினால், தெற்றுப்பற்கள் தோன்றக்கூடும்.
வைட்டமின்-சி மிகுந்த சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு ஸ்கர்வி நோய் வராது. உதாரணமாக, தினமும் ஓர் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டால் அல்லது ஒரு எலுமிச்சைப் பழச்சாறு குடித்தால் பல் ஈறுகள் வலுப்படும்.
தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்புத் தரும்.
போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்துங்கள். வாய் வறட்சியை இது போக்கும். இதனால் வாய்நாற்றம் தவிர்க்கப்படும்.
நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும்.
பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துக் கழற்ற முயற்சிக்காதீர்கள். இப்படிச் செய்வதால் பற்கள் மட்டுமல்லாமல் ஈறு, உதடு மற்றும் நாக்கும் சேதப்படும்.
மது, புகையிலை, வெற்றிலை, பான்மசாலா போன்றவை பற்களுக்கு எதிரிகள். புற்றுநோய்க்கு வழி அமைக்கும். இவற்றை அண்டவிடாதீர்கள்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் பழக்கம் இருந்தால், பல் சொத்தை உள்ளிட்ட பல் தொல்லைகள் பலவற்றை ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிட முடியும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பல் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி வரும். ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் பல் பிரச்னை தலை தூக்காது,

