
மகிழ்ச்சி என்பது எங்கோ, எதிலோ கிடைக்கும் பொருள் அல்ல.அது நாமே,நமக்குள் உருவாக்கிக் கொள்ளக்கூடிய, என்றும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய ஓர் மனநிலை!
மகிழ்ச்சியான மனநிலையே நமக்கு என்றும் சாதகமான சூழலை உருவாக்கித்தரும்.நாம் செய்ய வேண்டிய வேலைகளை இலகுவாக்கித் தரும்.நாம் விரும்பியதை அடையக் கூடிய மனபலத்தைத் தரும்.
மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒருவருக்கு ‘எண்டோஃபின்ஸ்’ (Endorphins) எனப்படும் ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.அந்த ஹார்மோனே மனதை சுறுசுறுப்பாகவும் இலகுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
நாம் என்னதான் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தாலும் ஏதோ ஒரு சூழலில் மகிழ்ச்சி குறைவது இயல்பு.அந்த நேரத்தில் நம்மிடம் சுரக்கும் எண்டோஃபின்ஸ் ஹார்மோனை அதிகப்படுத்தக்கூடிய வகையில் நம் செய்கைகள் அமைந்தாலே போதுமானது என்கிறது ஆழ்மன இயல்.
உதாரணமாக, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி,நிமிர்ந்து உட்கார்தல் போன்றவற்றைச் சொல்லலாம்.தவிர, தலையைக் குனியாமல், நேராக உட்கார்ந்து, உதடுகளைச் சிரிப்பது போல் கொஞ்ச நேரம் வைத்துப் பாருங்கள். இயல்பாகவே உங்களுக்குள் மகிழ்ச்சிப் பூ மலரும்.நீங்கள் விரும்பும்வரை எத்தனை முறை வேண்டுமோ அத்தனை முறை செய்து பாருங்கள்.உங்களுக்குள் சுரக்கும் எண்டோஃபின்ஸ் உங்கள் மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்ளும். உங்கள் மகிழ்ச்சி,உங்கள் வாழ்க்கையில் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளும்.

