
என்னை அவ்வப்போது கவலைகள் சூழ்ந்து செயல்பட விடாமல் முடக்குகிறது.தைரியமாக இருக்க வேண்டும் என்று மன உறுதியோடு வைராக்கியமாக ஓரு வாரம் இருப்பேன்… மீண்டும் சிக்கி விடுவேன்.தப்பிக்க என்ன வழி டாக்டர்?
-அ.சுந்தரம்,தேனி.
மன அழுத்தத்தை எளிதாக விரட்டலாம்.
1.நண்பர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும்.
2.ஒத்த சிந்தனை உள்ள ஆதரவான உறவுகளை,நட்பை ஏற்படுத்திக்கொள்வது முக்கியம்.
3.உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்தவும்,சீராக கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும்(Managing emotions).
4.நல்ல சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ளுதல் (Positive thinking)அவசியம்.
5.நேரத்தை சரியாகக் கையாளுதல் (Time Management)மன அழுத்தம் வராமல் தடுக்கும்.
6.பிரச்னை வரும் முன்பே அதைக் கணித்து, எதிர்கொள்ள தயாராக இருத்தல் நல்லது.
7.சரியாக முன் கூட்டியே திட்டமிடுதல் சிக்கல் பிக்கல் இல்லாமல் பயணிக்க உதவும்.
8.தன்னைப்பற்றி உயர்வாக கருத வேண்டும்…தன்னையே மதிக்க வேண்டும்.
9.இறுக்கமான விஷயத்தையும் நகைச்சுவையுடன் அணுகினால் எளிதாக கடக்கலாம்.
10.ஆரோக்கிய உணவு உட்கொள்ளுதல்… உடற்பயிற்சி, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுதல்,6-8 மணி நேரம் தூங்குதல் போன்ற செயல்பாடுகள் உற்சாகமாக வாழ வழி காட்டும்.
11.பிரச்னை ஏற்பட்டால் அதைக் கண்டு விலகாமல் எதிர்கொண்டு,அதன் காரணியை ஆராய்ந்து அதை சரிசெய்யும், சமாளிக்கும் வழியை தேடிப்பிடித்தால் நீங்கள் வெற்றியாளரே!
12.தசைகளை தளர்வாக (Relaxing Muscles)ரிலாக்ஸ் செய்யும் செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.
இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் கவலை இல்லா வாழ்வு நிச்சயம்.

