


தமிழ்நாட்டின் மிகவும் பெருமைமிக்க, பழமையான கல்லூரியான சென்னை மாநிலக் கல்லூரியில்(1840) உளவியல் துறையை தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி,சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
உளவியல் துறையின் தலைவர் முனைவர் சாரா மாணிக்கராஜ்,கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.ராமன்.நமது இதழின் பிதாமகன் டாக்டர் ஜி.ராஜமோகன், உளவியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.
உளவியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை பார்ப்பதற்காக டாக்டர் ராஜமோகன் சென்றபோது எல்லோரும் இன் முகத்துடன் வரவேற்று கௌரவித்தார்கள்.
தமிழ்நாட்டில் உளவியல் கல்வியை பரவலாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததில் மாநில கல்லூரிக்கு முக்கிய பங்கு உண்டு.
மனம் எங்கே இருக்கிறது? எண்ணங்கள் எங்கே எப்படி,உருவாகிறது? உணர்ச்சிகள் எப்படி ஊற்றெடுக்கின்றன? நினைவுகள் மூளையில் எங்கே பதிகின்றன? மன நோயின் பாதிப்புகள் என்ன… மனநோயாளிகளை எப்படி கையாள வேண்டும் ?எப்படி பாதுகாப்பது?
மன அமைதியுடன் எப்படி வாழ வேண்டும்? மன அழுத்தத்தை போக்குவது எப்படி? குழந்தைகளை வளர்ப்பது எப்படி? இல்லற வாழ்வில் இனிமை சேர்ப்பது எப்படி?… இவற்றையெல்லாம் உளவியல் கற்றுத் தருகிறது. உளவியல் மருத்துவ அறிவியலாக மலர்ந்துவிட்டது. மக்கள் அனைவரும் உளவியலை கற்றுக் கொண்டால்,நோய் நொடி இல்லாமல், கசப்புணர்வு இல்லாமல், மகிழ்ச்சியாக, உற்சாகமாக வாழலாம்.
உளவியல் கல்வியை வளர்த்த மாநிலக் கல்லூரியின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.
-குணசேகரன்

