னித குலம் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு உலகெங்கும் மருத்துவத் துறை ஆற்றியிருக்கும் பங்களிப்பு என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆதி மனிதன் காலத்தில் இருந்து, இன்று வரை மனிதன் தொடர்ச்சியாக மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறான்.அந்த வகையில்,உலக மருத்துவத் துறைக்கு தமிழர்கள் வழங்கிய மாபெரும் கொடை ‘சித்த மருத்துவம்’.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு முதல் நாள் அகில இந்திய சித்தவைத்தியர்களின் சங்கத்தின் மூலமாக வடலூர் சித்தவைத்தியர்கள் மாநாடு நடப்பது வழக்கம்.அதேபோல் இம்முறை 31.01.2026 சனிக்கிழமையன்று 48வது அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு நடைபெற்றது.இதில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா நிறுவனத்தின் இயக்குனர் பேரா.மரு. செந்தில்வேல் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

“பாரம்பரிய மருத்துவர்களுக்கு நான் எப்போதும் பாதுகாவலனாக இருப்பேன்! எனவேதான் பட்டதாரி மருத்துவர்களை இம்மாநாட்டிற்கு முதல்நாள் வரவழைத்து, பாரம்பரிய மருத்துவர்களின் அனுபவ முறைகளையும், பற்பம், செந்தூரம்,கட்டு உள்ளிட்ட பல வைத்திய முறைகளை அறிந்து கொள்ள வைத்துள்ளோம்!

கடலூர் மாவட்டத்தில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா மருத்துவமனை கட்டுவதற்கு வாய்ப்புள்ளது! ஆராய்ச்சிக்கு வழி காட்டவும் தேசிய சித்த மையம் தயாராக உள்ளது.
சித்த மருத்துவம் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளது.நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்வோம்” என்று குறிப்பிட்டார் பேராசிரியர் டாக்டர் செந்தில்வேல்.

500 க்கும் மேற்பட்ட சித்தா பாரம்பரிய மற்றும் பட்டதாரி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். உலகமே வியந்து பார்க்கும், தமிழர்களின் சித்த மருத்துவம், பரவலாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் கடலூர் டாக்டர் சி.ஏ. ரவி அவர்களுக்கு “வள்ளலார் விருது” வழங்கி கவுரவித்திருப்பது பாராட்டுக்குரியது.
உணவே மருந்து,மருந்தே உணவு.அனுதினமும் தமிழர் வாழ்வில் ஒன்றிணைந்த மருத்துவமே சித்த மருத்துவம் என்று பெருமை கொள்வோம்.

-குணசேகரன்.