ந்த மருந்து கடைகளில் கிடைக்காது; மருத்துவர்களும் தயாரித்து கொடுக்க முடியாது.ஒவ்வொருவர் மனதிலும் உற்பத்தியாகும் மருந்து…இதன் பெயர் அன்பு.

அன்பும் கருணையும் நிறைந்த இதயம் உள்ள மனிதர்கள்  வாழ்நாளில் பெரும்பகுதி ஆரோக்கியமாக இருப்பதற்கும்,நீண்ட நாட்கள் வாழ்வதற்குமான சாத்தியக்கூறுகள் அதிகம்.

அன்பு மக்களை குணப்படுத்துகிறது.

அன்பை கொடுப்பவரையும் பெறுபவரையும் ஒருசேர குணமாக்குகிறது.தொட்டு உணர முடியாத பல வடிவங்களை கொண்ட இந்த அன்புதான் ஒவ்வொரு சிகிச்சைக்கான உறவுகளுக்கும் நுழைகிறது.ஆறுதல் அளித்து மகிழ்ச்சி அளிக்கிறது. அற்புதங்களை நிகழ்த்துகிறது.அன்பு மனித இனத்தின் நோய்க்கான மருந்து.நம்மிடம் அன்பு இருந்தால் நலமாக வாழலாம்.

பணம் ஒரு பெரிய நாயை வாங்கிவிடும்; ஆனால் அன்பு ஒன்றுதான் அந்த நாய் தனது வாலை ஆட்டும்படி வைக்கும். முழு அன்பு செலுத்துவதற்கு இன்னும் நேரம் வந்துவிடவில்லை என்று நினைக்கவே கூடாது. சில சமயம் காலம் கடந்து விடலாம்.

அன்பு என்ற மொழியைக் காது கேளாதவர் கூட கேட்கலாம்; பார்வையில்லாதவர்கூட பார்க்கலாம். ஒரு நண்பன் இறந்தபிறகு இடுகாட்டில் அவனது சமாதியில் மலர்கள் வைப்பதை விட அவன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவனை அன்புடன் நடத்துவது சிறந்தது.

-டாக்டர்.ஆர்.பரமேஸ்வரன். உளவியல் நிபுணர்.