
கூகுள் என்பது ஒரு தேடு இயந்திரம்.நாம் தேட விரும்புவதைச் சொல்கிறோம். அது தொடர்பான அனைத்து இணைப்புகளையும் தேடி நம் முன் கொட்டுகிறது. சில தகவல்கள் ஆணித்தரமான உண்மையாகவும் சில தகவல்கள் நிபுணர்களின் துணையுடனும் சில தகவல்களைக் கண்டவுடனே நிராகரிக்கவும் பழகிக்கொண்டால் கூகுள் ஒரு நல்ல தோழன்.
அதை விட்டுவிட்டு எல்லாவற்றுக்கும் கூகுள் தான் உற்ற துணை என்று இருப்பது அவ்வளவு சரியானதல்ல.
எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ மருத்துவம் சம்பந்தமான விஷயங்களுக்கு இது சாலப் பொருந்தும்.
புற்று நோயா…10 நாளில் குணமாகும், சிறுநீரக கோளாறா…5 நாளில் சரியாகி விடும், ஆண்மைக் குறைபாடா…ஒரு வாரத்தில் சரியாகும்… சரியாக வில்லை என்றால் பணத்தை திரும்ப வாங்கிக்கொள்ளலாம் என்று வரும் விளம்பரங்களை செய்திகளை அப்படியே நம்பக்கூடாது.
தகுதி வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனை தேவை.

