மது தமிழ்க் கலாச்சாரத்தில் வெற்றிலைக்கு எப்போதும் தனியிடம் உண்டு‌.முக்கிய நிகழ்வுகளுக்கு அழைப்பிதழுடன் வெற்றிலைப,பாக்கு வைக்கும் வழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. மூலிகையான வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்புடன் வால்மிளகு,ஏலக்காய் கிராம்பு,சாதிக்காய், சுக்கு,காய்ச்சுக்கட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து வாய் மணக்க தாம்பூலம் தரிப்பது தமிழர்கள் வழக்கம்.

வெற்றிலை, பாக்குடன் செயற்கையாக உடலுக்கு ஒவ்வாத செயற்கைத் திரவியங்கள் மற்றும் புகையிலை,பான் மசாலா போன்றவற்றைக் கலந்து போதை ஏற்றும் பீடா விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாய், வயிற்றுப் பகுதியில் ஆறாத புண்களும், தொடர்ச்சியாகப் பயன்படுத்திவந்தால், புற்று நோயும் உருவாக வாய்ப்பிருக்கிறது.

ஆகவே,போதை தரும் தாம்பூலங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும்,நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த வாந்தி எடுப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் தாம்பூலம் தரிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாரம்பரியமான தாம்பூலம் தரிக்கும் முறையைப் பின்பற்றி,நோய் அணுகாமல் நலமுடன் வாழலாம்.