
பலரும் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர்.வயது அதிகரிக்கும் போது இந்த சிக்கல் இன்னும் மோசமாகிறது.இதற்கு கழிவறைகளுக்கும் முக்கிய பங்குண்டு.இன்று நாகரிகம் என்ற பெயரிலும் வசதிக்காகவும் நாற்காலியில் அமர்வதுபோல உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிப்பறையான வெஸ்டர்ன் டாய்லெட் பரவலாக இருக்கிறது.
சித்த மருத்துவம், குத்துக்காலிட்டு அமர்ந்தே மலம் கழிக்க வேண்டும் என்கிறது. இந்தியன் டாய்லெட் கழிப்பறையே அதற்கு ஏற்றது.
இதை நவீன மருத்துவமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.தொடை, வயிற்றுப் பகுதியில் அழுத்துவதால் வயிற்றுப் பகுதியின் உள் அமைப்பு மலம் கழிக்க வசதியாக மாறும்.மலம் முழுமையாக வெளியேறும்.
அத்துடன் முழங்கால் மூட்டுக்குச் சிறந்த பலத்தைக் கொடுத்து மூட்டுவலி ஏற்படுவதைத் தடுக்கும்.மூட்டுவலி இருப்பதால் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதாகப் பலரும் சொல்வார்கள். ஆனால்,வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதுதான் மூட்டுவலிக்குக் காரணமாகிறது. எனவே,நம் பாரம்பரிய மருத்துவம் வலியுறுத்தும் ‘னஇந்தியன் டாய்லெட் முறையே சிறந்தது.
-டாக்டர்.தெ.வேலாயுதம், சித்த மருத்துவர்.

