
நல்ல மருத்துவர்களை கொண்டாடி மகிழ வேண்டும்.நன்றி பாராட்ட வேண்டும். லயன்ஸ் க்ளப் இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில், 01.07.2025 அன்று நடைபெற்ற தேசிய மருத்துவர்கள் தினத்தில், கலைமாமணி மருத்துவர் எஸ். அமுதகுமார் அவர்களுக்கு, எழுத்து மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வை கடந்த 50 ஆண்டு காலமாக தொடர்ந்து செய்து வரும் மருத்துவ சேவையினைப் பாராட்டி,சிறந்த மருத்துவ சேவைக்கான விருதினை, தமிழ்நாடு அரசு மின் வாரியத் தலைவரும், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருமாகிய டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் IAS அவர்கள் வழங்கினார்கள். உடன் லயன்ஸ் கிளப் தலைவர் போஸ், கண் மருத்துவர் லயன்.எம்.ரவிசங்கர் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

