– டாக்டர் ஜி.ராஜமோகன்.

ல்ல மனப்பாங்குள்ள மக்களுக்கென்று சில தனி பண்புகள் உள்ளன.அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.பொதுவாக இப்படிப்பட்டவர்கள் அன்பாகவும், நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், தன்னடக்கத்துடனும் இருப்பார்கள். எப்போதும் அவர்கள் நல்லவிதப் பலன்களை எதிர்பார்த்து இருப்பார்கள்.

நல்ல மனப்பாங்குள்ளவர்கள்(பாசிடிவ் சிந்தனை) எல்லாப் பருவகாலங்களிலும் கிடைக்கின்ற பழம் போன்றவர்கள். அவர்களை எல்லோரும் விரும்புவார்கள்.

பாசிடிவ் சிந்தனை இருந்தால்(The benefits of a Positive Attitude)…

*நல்ல மனப்பாங்கானது
உற்பத்தித்திறனைப் பெருக்குகிறது.

*ஒரு குழுவாக வேலை செய்யும் பக்குவத்தை வளர்க்கிறது.

*பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

*தரத்தை மேம்படுத்துகிறது.

*நல்ல சுமூகமான சூழலை உருவாக்குகிறது.

*நன்றி உணர்வு அதிகரிக்கும். விசுவாசத்தன்மையை வளர்க்கிறது.

*லாபங்களை அதிகரிக்கிறது.

*முதலாளிகள், தொழிலாளிகள், வாடிக்கையாளர்களுக்கு இடையே நல்ல உறவு முறையை வளர்க்கிறது.

*மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

*சமுதாயத்திற்கு உதவும் அங்கத்தினராகவும், நம் நாட்டிற்கு ஒரு அரிய சொத்தாகவும் நாம் ஆவதற்கு உதவுகிறது.

*பழகுவதற்கு இனிய நண்பராக,தோழமை உணர்வுடன் எல்லோரும் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது.

*நிறைய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

*எங்கும் எப்போதும் நட்பு வட்டம் வளர்ந்து கொண்டே இருக்கும்.

*வாழ்க்கையை ரசித்து கொண்டாடி மகிழ்வார்கள்.

*மனதில் அன்பு மட்டுமே மிகுதியாக இருக்கும்.இதனால் எதிரிகள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.