
ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு கண்டிப்பாகத் தேன் கொடுக்கக்கூடாது. தேனில் உள்ள Clostridium botulinum என்ற பாக்டீரியா நச்சு,குழந்தைகளின் மென்மையான குடலை பாதித்து, Infant Botulism எனப்படும் உயிருக்கு ஆபத்தான நரம்பு மண்டல பாதிப்பை ஏற்படுத்தலாம்.12 மாதங்களுக்குப் பிறகுதான் தேன் கொடுப்பது பாதுகாப்பானது.
ஏன் கொடுக்கக்கூடாது?:
பச்சிளம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான அமைப்பு முதிர்ச்சியடையாததால்,தேனில் உள்ள பாக்டீரியா நச்சுக்களை ஜீரணிக்க முடியாது.
ஆபத்துகள்:
மலச்சிக்கல்,தசை பலவீனம்,மூச்சுத் திணறல்,சாப்பிட மறுத்தல் மற்றும் சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம்.
சமீபத்தில் ஒரு பச்சிளம் குழந்தைக்கு தேன் கொடுத்ததால் மிகவும் ஆபத்தாகி,உயிருக்கு போராடிய செய்தி பத்திரிகைகளில் வந்தது.பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

