
டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu).
டாக்டர் ஆர்.பானுபிரியா, BAMS,MD(Acu), MBA(HM)
யார் தான் முதுமையை விரும்புவார்கள். முதுமையை நோக்கி பயணிக்கிறோம் என்ற நினைப்பே நமக்கு பயத்தையும் சோர்வையும் உண்டாக்கி விடுகிறது.முதுமை என்பது காலத்தின் பரிசு.அதனை யாராலும் தவிர்க்க இயலாது.
மனிதர்களுக்கு வயதாகும்போது முகம்,கை,கால்களில் சுருக்கம் ஏற்பட்டு நோய்கள் அரவணைத்துக் கொள்கின்றன என்றாலும் பலர் தங்கள் இளமை காலத்திலேயே தவறான பழக்க வழக்கங்களால் முதுமையை முன் கூட்டியே வரவழைத்துக் கொள்கிறார்கள்.
40,50 வயதை கடக்கும்போதே தோல் சுருங்கி தலைமுடி நரையோடி,கண் பார்வை மங்கி,நாடி நரம்புகள் தளர்ந்து கிழப்பருவம் எய்தி விடுகிறார்கள்.
அதே நேரம் இயற்கையின் சூட்சுமம் அறிந்தவர்கள், உடலை கோயிலாக ஆராதிக்கிறவர்கள் தங்கள் 70 வயதிலேயும் நாற்பது வயது இளமையோடு வாழ்வை கொண்டாடுகிறார்கள்.
இளமையை நீண்ட காலம் நம்மால் நீட்டிக்க முடியும். நோய்களின்றி ஆயுள் காலத்தையும் நீட்டித்துக் கொள்ள முடியும் என்பதே நம் பாரம்பரிய மருத்துவம் சொல்லும் உண்மை. அதற்கான சூத்திரங்கள் நம் ஆயுர்வேதம்,சித்தா, இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவங்களில் உள்ளன.
இளமையின் இரகசியம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உணவு, சருமப் பராமரிப்பு, உடற்பயிற்சி மற்றும் மன அமைதி ஆகியவற்றின் கலவையாகும்.
முதுமைக்கான காரணிகள்
இயல்பான முதுமையையும் விரைவான முதுமையையும் நாம் இனம் காண வேண்டும். இளமையில் வறுமை கொடிது என்றார் ஒளவையார். அதுபோல் இளமையில் முதுமை என்பதும் கொடிதே. அதற்கான காரணம் என்ன என்பதை இளம் முதியவர்கள் அறிவதே இல்லை. அவர்களின் மோசமான உணவு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொறித்த உணவுகள்,மாவுப் பொருட்கள்,பாஸ்ட் புட்
உணவுகள்,தவறான பழக்க வழக்கங்கள், போதைப் பழக்கம், தூக்கமின்மை,மன அழுத்தம், செல்போனில் அதிக நேரம் செலவழித்தல், வேலையின்மை, மோசமான சுற்றுச்சூழல் இன்னும் பல காரணிகள் உள்ளன.
இளமை நம் அருகில்
இளமையை தேட வேண்டியதில்லை. அந்த அற்புதம் நம் கண்ணுக்கெதிரே கைக்கெட்டும் தூரத்தில் கொட்டிக்கிடக்கிறது. 70 சதவீத இளமையை நம் உணவு பழக்கம் மூலமே நம்மால் பெற்றுவிட முடியும்.
நெல்லிக்காய்,தோல் பொலிவை பாதுகாக்கும்.முடி வளர்ச்சிக்கு உதவும். தேனும்,எலுமிச்சை சாறும் உடல் கழிவுகளை நீக்கி உறுப்புகளை மென்மையடையச் செய்யும்.தோல் உலர்ந்து போவதை அவகோடா பழம் தடுக்கும்.பாதாம், வால்நட் ஆகியன வயதான தோற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.மஞ்சள் சேர்த்த பாலை அருந்துவது முகத்திற்கு பள பளப்பை கொடுக்கும்.தோல் நலன்,கண்களின் ஆரோக்கியம், இளமை அழகினை பீட்ரூட்,கேரட் ஜூஸ் தருகிறது.
தக்காளி,தயிர், முருங்கைக் கீரை உள்ளிட்ட கீரை வகைகள் இளமைக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கின்றன. நாள் தோறும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதும் முக்கியம். போதுமான தூக்கமும் தேவையான உடற்பயிற்சியும் இளமைக் காலத்தை இருப்பில் வைக்கும்.
இளமையை நீட்டிக்கும் ஆயுர்வேதா
ஆயுர்வேதம் இளமையை ஊக்குவித்து உயிர்சக்தியை அதிகரிக்கிறது. உடலில் நிகழும் வயதாவதற்கான செயல்முறைகளை தாமதப்படுத்துகிறது. அதில் ஒரு முக்கியமான சிகிச்சை முறை ரசாயன ஆயுர்வேத சிகிச்சையாகும்.இது உடல் திசுக்களை புதுப்பித்து நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து நீண்ட இளமை மற்றும் ஆயுளை அளிக்கிறது. அஷ்வகந்தா, சதாவரி,பிரம்மி, சமுத்திர பன்னீர் ஆகியன உயிர் சக்தியை அதிகரித்து இளமையை நீட்டிக்கச் செய்கின்றன.
மருந்துகள்
உப்டான் (UBTAN) அல்லது மூலிகை ஸ்க்ரப். இது பல்வேறு நன்மைகளுக்கு பெயர் பெற்ற ஒரு பாரம்பரிய தோல் பராமரிப்பு கலவையாகும். இதில் கொண்டைக்கடலைமாவு,மஞ்சள், மூலிகைகள் போன்ற பொருட்கள் உள்ளன. இது ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. இறந்த சரும செல்களை நீக்கி, பிரகாசமான நிறத்தை ஊக்குவிக்கிறது.
அபயங்கா
அபயங்காவின் மென்மையான மசாஜ் இயக்கங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றி தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை ஏற்படுத்துகிறது. வறட்சி மற்றும் தோல் உரித்தலைத் தவிர்க்கிறது.
தோல் பராமரிப்பு
இளமை தேடலில் தோல் பராமரிப்பு முக்கியமானதாகும். அதற்கான ஆயுர்வேத மூலிகைகள் பல உள்ளன.வேம்பு போன்ற மூலிகைகள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு ஏற்றவை.மஞ்சள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உட்பட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. கற்றாழை, ஆற்றலையும் ஈரப்பதத்தையும் தருகிறது. ஆயுர்வேதத்தில் வெளிப்புற அழகு என்பது உள் நலத்தின் பிரதிபலிப்பின் குறியீடாக உள்ளது
எண்ணெய் குளியல்
வாரத்திற்கு இரண்டு முறை அஸ்வகந்தா எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய் குளியல் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி முதுமையை நீண்ட தூரத்திற்கு தள்ளி வைக்கிறது. தியானம், பிரணயாமம் ஆகியன மனதிற்கு சாந்தத்தையும் உடலுக்கு இயற்கை ஒளியையும் உருவாக்கித் தருகின்றன.
ஆயுர்வேத யோகங்கள்
சூரிய நமஸ்காரம், பவன் முக்தாசனம், சர்வாங்காசனம், ஹலாசனம் ஆகியன ரத்த ஓட்டத்தை அதிகரித்து இளமையோடு உடலையும் மனதையும் வைத்திருக்கும்.
மனதோடு தோழமை
மன அழுத்தம் மிகுந்தவர்கள் இளவயதிலேயே முதுமையான தோற்றத்தை அடைந்து விடுவார்கள். நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் என்கிற ஹார்மோனை அதிகரித்து சருமத்தில் உள்ள கொலாஜனை உடைத்துவிடுகிறது. இதனால் விரைவில் வயதான தோற்றம் வந்துவிடும்.ஆனால், இயற்கையான வாழ்வியல் முறையில் நேரத்தை செலவிடுதல், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுதல், வாய்விட்டு சிரித்தல் போன்ற செயல்களின் மூலம் இவர்கள் இளமையாக இருக்கிறார்கள்.மன அழுத்தத்தை நன்றாக நிர்வகிப்பவர்கள் என்றும் இளமையாக இருக்கிறார்கள்.
படைப்பாற்றல்
படைப்பாற்றலும், கற்றலும்,புதியன தேடலும் மனதை உற்சாகமாக வைத்திருக்கும். மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.இதனால் அவர்களின் இளமையின் ரகசியம் அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மகிழ்ச்சியான மனநலன்,நலன் பயக்கும் தூக்கம், அன்றாட செயல்பாடுகள், போதை பழக்கமின்றி இருத்தல் ஆகியவற்றின் மூலம் நாம் இந்த இலக்கினை அடையலாம்.
எங்கள் வி ஹெர்பல் கேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் தி சுசான்லி மருத்துவ குழுமத்தின் மூலம் இளமையை தக்க வைக்கும் சிறந்த ஆயுர்வேதிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.மேலும் நீடித்த இளமையை வழங்கும் யோகா, தியானப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனர்.இளமை துடிப்போடு காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்யும் சாதனையாளர்களுக்கு நாங்கள் உதவுகிறோம், வழிகாட்டுகிறோம்.
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்,
எண்: 11,பாரதிதாசன் தெரு,பிள்ளையார் கோயில் எதிரில்,
மஞ்சக்குப்பம்,
கடலூர்:607 001
93676 22256.

