க்குபஞ்சர் சிகிச்சை என்பது உடலில் குறிப்பிட்ட புள்ளிகளில் மெல்லிய ஊசிகளை செருகி வலி மற்றும் பிற உடல் நலம் பிரச்னைகளை போக்க உதவும் பாரம்பரிய சீன மருத்துவ முறையாகும்.

இந்த சிகிச்சை முறை உலகமெங்கும் பரவி உள்ளது‌.உடல்நோய் பாதிப்புகளுக்கு எளிய முறையில் அதிக மருத்துவ கட்டணம் இல்லாமல், டெஸ்ட்,ஸ்கேன் என்று அதிகப்படியான மருத்துவ பரிசோதனைகள் இல்லாமல்,மருந்து மாத்திரைகள் இல்லாமல்,பக்க விளைவுகள் இல்லாமல் சிகிச்சை பெற்று நலம் பெறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கவும்,மருத்துவ சிகிச்சை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மேலும் சிறப்பாக சிகிச்சை அளிக்க ஒரு அமைப்பு அவசியம் என்பதை உணர்ந்து,27 ஆண்டுகளுக்கு முன்பு கவுன்சில் ஆஃப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டர் என்ற அமைப்பை தொடங்கினார் டாக்டர் சி‌.ஏ.ரவி.இந்த அமைப்பின் இணை நிறுவனர் டாக்டர் உஷா ரவி.

மருந்தில்லா மருத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை இவர்களுக்கு உண்டு.
அக்குபஞ்சர் மருத்துவம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருவதோடு ஏராளமான அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

27 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்றது. நிகழ்ச்சியயை செயலாளர் டாக்டர் மனோஜ் தொடங்கி வைத்தார். 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் நடத்துவது மருத்துவ அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பயிற்சி வகுப்புகள், பயிலரங்கம் நடத்துவது பற்றிய ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக நெல்லை மண்டல தலைவர் டாக்டர் ஏ. செல்வகுமார் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

டாக்டர் சி.ஏ.ரவியின் மருத்துவப் பணிகள் சிறக்க நமது இதழ் சார்பாக வாழ்த்துகள். 

-பவித்ரன்.