
வேலை செய்யும் இடங்களில் முதுகு வலி,கழுத்து வலி,உடல் வலி வராமல் இருக்க இந்த யோசனைகளை பின்பற்றுங்கள்.
1.ஒரே மாதிரி நிலைகளில் பணியாற்றாமல் அடிக்கடி உடலின் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.
2.உயரமான காலணிகளை அணியாதீர்கள். நீண்ட நேரம் நிற்கும்படி
நேர்ந்தால் கால்களை அவ்வப்போது ஏதாவது ஒரு பெட்டி அல்லது
நாற்காலியின் மீது வைத்து ஓய்வு கொடுங்கள்.
3.வேலை செய்வதற்கு ஏற்ற வசதியான கருவியினைத் தேர்ந்தெடுங்கள்.
4.தொடர்ந்து குனிந்த நிலையில் பணியாற்றாதீர்கள். குறிப்பாகப் படிக்கும் போது புத்தகத்தை முகத்திற்கு நேரே உயர்த்தி வைத்துப் படிக்கவும்.
5.ஒரே வேலையைத் தொடர்ந்து செய்யாதீர்கள். இடையிடையே ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஓய்வு எடுங்கள். 10,15 நிமிடத்
தொடர் வேலைக்கு 30 விநாடி ஓய்வுகூடப் பலனளிக்கும்.
6.தேவையற்ற விதத்தில் உடலை வளைத்து, நிமிர்த்தி, நெளித்து
வேலை செய்யாதீர்கள்.
7.தொலைபேசியில் அடிக்கடி பேச நேர்ந்தால் குனிந்து பேசாதீர்கள்.
ஹெட்போன் பயன்படுத்தலாம்.
8.உங்கள் கால்கள் நன்றாகத் தரையில் படியும்படியாக நாற்காலியில் அமருங்கள். அடிக்கடி கால்களின் நிலைகளை மாற்றுங்கள். உங்கள் கீழ்முதுகின் வளைவிற்குப் பாதுகாப்பளிக்கும் நாற்காலியைப் பயன்படுத்துங்கள். இயவாவிடில் சுருட்டிய துண்டு ஒன்றைப்
பயன்படுத்தவும்.
9. நாற்காலியின் விளிம்புகள் தொடையையோ
முழங்காலையோ அழுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
10. எடைகளைத் தூக்கும்போது கவனமாக இருங்கள். உடலுடன் சேர்த்தவாறு எடைகளைத் தூக்குங்கள்.
11.உடலை நன்கு பேணுங்கள். மோசமான உடல்பராமரிப்பு, புகை பிடித்தல் போன்றவை முதுகு வலி ஏற்பட முக்கியக் காரணங்களாகும்.
வலிகளைத் தடுக்கும் முறைகள்
முறையான உடற்பயிற்சியே முதுகுவலியை வெல்லும் மிகச் சிறந்த வழிமுறையாகும்.
தசைகள், தசைநாண்கள் மற்றும் மூட்டு நாண்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகப்படுத்துகிறது.
முதுகிற்கு வலுசேர்க்கும் தசைகளைப் பலப்படுத்துகிறது.

