
இனிப்பு சாப்பிடுவது…அதுவும் அடிக்கடி சாப்பிடுவது குழந்தைகளின் பல் சொத்தையாக வாய்ப்பு அதிகம்.கண்டிப்பாக சாக்லேட் சாப்பிடக் கூடாது என்று ஒரேயடியாகத் தடை விதிப்பது ஏற்புடையதல்ல. பெருத்த ஏமாற்றத்தையும், வெறுப்பையும், மனத்தில் வலியையும் ஏற்படுத்திவிடும்.
பல் சொத்தை என்பது, பற்களில் எத்தனை முறை இனிப்புப் பொருள்கள் (சாக்லேட்டுகள்) படுகின்றன என்பதைப் பொருத்ததே தவிர, எவ்வளவு (எண்ணிக்கை) சர்க்கரைப் பொருள்கள் (சாக்லேட்டுகள்) படுகின்றன என்பதைப் பொருத்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, குழந்தைகளை ஒருநாளைக்கு ஒருமுறை அதுவும் மதிய உணவுக்குப் பிறகு சாக்லேட் சாப்பிட அனுமதிக்கலாம்.
அந்தச் சமயத்தில், ஒரு குழந்தை எத்தனை சாக்லேட்கள் சாப்பிட விரும்புகிறதோ அத்தனை சாக்லேட்டுகளை சாப்பிடலாம். இந்த வகையில், சாக்லேட்டுகள் சாப்பிடு வதை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, சாக்லேட் சாப்பிடும் கால அளவை மாற்றி அமைப்பதன் மூலம் பற்கள் சொத்தையாவதைத் தடுக்க முடியும்.
– டாக்டர்.ஜி.தண்டபாணி

