
தாம்பத்ய வாழ்க்கையில் ஆண்களுக்கு தடையாக இருக்கும் ஏதோ ஒரு பிரச்னையைத்தான் ஆண்மைக் குறைபாடு என்கிறோம்.ஓர் ஆண் உடலுறவு கொள்ளப் பயன்படுவது ஆணுறுப்பு.அந்த உறுப்பின் அமைப்பு, அது செயல்படும் விதம் ஆகியவற்றை மருத்துவ ரீதியாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்மைக் குறைபாடு பற்றி அறிய அதுவே அடிப்படையாக அமையும்.
சிறுநீர் கழிக்கப் பயன்படுவது என்ற அளவில்தான் ஆணுறுப்பு முதலில் நமக்கு அறிமுகமாகிறது. நாம் பருவமடைகிற காலகட்டத்தில்தான், அது உடலுறவுக்கும், இனப்பெருக்கத்துக்கும் உதவுகிற உறுப்பு என்பதும்,அதன் மூலமாக நாம் இன்பம் அனுபவிக்க முடியும் என்பதும் நமக்குப் புரிய வருகிறது.நம்மை ஆண்மை உள்ளவனாக அல்லது இல்லாதவனாக அடையாளப்படுத்தக் கூடியதும் இந்த ஆணுறுப்புதான்.
இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்துவிடுவதால், ஆணுறுப்பின் அளவு, விறைப்புத்தன்மை, ஆற்றல் பற்றிய பயமும் சந்தேகமும் வந்துவிடுகிறது. பருவ வயதில் சிறு பொறியாக ஆரம்பிக்கும் சந்தேகம்தான் பின்னாளில் பெரிய தீயாக உருவெடுத்துவிடுகிறது.ஆணுறுப்பு பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் துவக்கத்திலேயே இந்தத் தீயை அணைத்துவிட முடியும்.
நமது உடலில் உள்ள உறுப்புகளில் நீண்ட நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது ஆணுறுப்பு மட்டும்தான்.உடலின் வெளிப்பகுதியில் இருக்கும் எல்லா உறுப்புகளுமே நாம் நினைத்ததைப்போல் செயல்படக்கூடியவை.நீட்ட நினைத்தால் கையை நீட்டலாம். மடக்க நினைத்தால் காலை மடக்கலாம். கேட்கக்கூடாது, முகரக்கூடாது என நினைத்தால் கைகளால் குறிப்பிட்ட உறுப்புகளை மூடிக்கொள்ளலாம்.
ஆனால்,இந்த வேலையெல்லாம் ஆணுறுப்பிடம் நடக்காது.நாம் நினைப்பதைப்போல் விறைத்துக்கொள்ளாது அல்லது செயல்படாது.அது விரும்பினால் விறைக்கும்; இல்லாவிட்டால் துவண்டுவிடும்.மனம் உற்சாகமாக இருப்பதற்கு எக்காலத்திலும் பயன்படும் உறுப்பு இது.
அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான ஆணுறுப்பு இருப்பதில்லை. நீளமாக,குட்டையாக, பருமனாக,மெலிந்த தாக,வளைந்ததாக என ஆணுறுப்பு ஒவ்வொருவருக்கும் வேறுபட்டுதான் அமைந்திருக்கும். அவ்வாறே அவற்றின் செயல்திறன்களும் விறைப்பின்போது மாறுபடும்.
சாதாரண நிலையில் சிறிதாகத் தெரிந்தாலும் விறைத்த நிலையில் அதன் அளவு பெரிதாகிவிடும். எல்லா ஆணுறுப்பும் 90 டிகிரி கோணத்தில் விறைத்து நிற்காது. சிலரின் ஆணுறுப்பு இடது அல்லது வலது பக்கம் வளைந்தும், தாழ்ந்தும் அல்லது நேராக நிமிர்ந்தும் காணப்படும்.
பெரிய ஆணுறுப்பை மட்டும்தான் பெண்கள் விரும்புவார்கள் என நினைப்பது தவறு. உலகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான புள்ளிவிவரங்கள், சராசரியான ஆணுறுப்பைத்தான் பெண்கள் விரும்புவதாகத் தெரிவிக்கின்றன.
பெரிய ஆணுறுப்பு உள்ள ஆண்களே அதை விரும்புவதில்லை என்பதுதான் உண்மை.
இன்பம்,உறுப்பின் அளவைப் பொறுத்து அமைவதில்லை. உறவை நிகழ்த்துவதில் உள்ள நிபுணத்துவத்தையும், கற்பனைத் திறனையும் பொறுத்தே அமைகிறது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்து. எனவே,அளவு முக்கியமல்ல.இளம் வயது ஆண்கள் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.ஏதாவது குறைபாடு உள்ளதாக கருதினால்,அருகில் உள்ள மருத்துவ நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது முக்கியம். உடல் ந என்பது லம் மருத்துவ அறிவியல் சார்ந்தது.எனவே, அருகில் இருக்கும் நண்பர்களிடம் சந்தேகம் கேட்க வேண்டாம். முறையாக படித்த, அனுபவம் உள்ள மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்
ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)

