எனக்கு வயது 47. திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. சமீப காலமாக ஆண்மைக் குறைபாடு இருப்பதாக உணர்கிறேன். இதை சரி செய்ய என்ன மாத்திரை சாப்பிட வேண்டும்.

-டி.சுந்தரராமன், கள்ளக்குறிச்சி

எல்லாவற்றுக்கும் மாத்திரை சாப்பிட்டால் போதும் என்று நம்பக்கூடாது. உங்களுடைய பிரச்னைக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும். ஆண்மைக் குறைபாட்டை நீக்க பலவழிமுறைகள் உள்ளன. உங்களுக்கு எது பொருத்தமானது என்பதை மருத்துவர்தான் உறுதி செய்ய வேண்டும்.

  1.  மருத்துவரின் தீவிர நேர்காணல் மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வது.
  2. வாழ்க்கை முறையில் மாற்றம் செய்து கொள்வது (உடற்பயிற்சி செய்வது, புகைப்பழக்கத்தை கைவிடுவது).
  3. வாக்யூம் கருவி மூலம் ஆண்மை எழுச்சி உண்டாக்குவது.
  4. உளவியல் ரீதியிலான கவுன்சலிங் பெறுவது.