நமக்கு வரும் வியாதிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்

  1. உடல் வியாதிகள்
  2. மன வியாதிகள்
  3. மனம் சார்ந்த உடல் வியாதிகள்
  4. உடல் சார்ந்த மன வியாதிகள்

உடல்வியாதிகளைப் பெரும்பாலான மருத்துவர்கள் கண்டறிவார்கள். இதற்கு பல சோதனைகள் உள்ளன.

மன வியாதிகளைக் கண்டறிவதில் பிரச்சனை. மனச் செயல்பாடுகளில், முடிவு, உறுதிகள் எடுப்பதில் குளறுபடி, இல்லாத ஒன்றை கேட்பதாக, பார்ப்பதாக உணருவது, வீணான ஆதாரமற்ற சந்தேகம் போன்ற அறிகுறிகள் தோன்றும் போது மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் விரைவில் குணமாக்கி விடலாம்.

மனம் சார்ந்த வியாதிகள் தான் இப்போது அதிகமாக உள்ளன. இரத்த அழுத்த உயர்வு, நீரிழிவு, இதயத்தாக்கு, கவலை சோர்வு நோய்கள். இல்லாத வியாதிகளை இருப்பதாக எண்ணி ஒரு மருத்துவர் மாறி பல மருத்துவரின் ஆலோசனை பெறுவது என செலவு செய்து கொண்டே இருப்பார்கள். இப்போது கொரோனா தங்களுக்கு வந்துவிட்டது என அச்ச மிகுதியால் வருகின்றனர்.

உடல் சார்ந்த மன வியாதிகளில் புற்றுநோய், எய்ட்ஸ், நாள்பட்ட காசநோய் போன்றவற்றால் மனச் சோர்வு விரக்தி அடைந்து யாராலும் நம்மை காப்பாற்ற இயலாது என வருகிறார்கள்

இவர்களுக்கு தேவையான சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் அளித்து வருகிறோம்.

டாக்டர் ஜி.ராஜமோகன்
அணுக:- 7904207959