டாக்டர் அஜய் வசந்த் M.D., (ACU) Ph.D.

பிறந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆம்பூர். பள்ளி படிப்புக்கு பின், வேலூர் விஐடி&யில் பொறியியல் பட்டம் பெற்றேன்.

அக்குபஞ்சர் துறையில், அக்கு டச் (Acu Touch), துறையிலும் எனர்ஜி ஹீலிங்  (Energy Healing),  துறையிலும் ஆராய்ச்சி செய்து M.D., (Acu) மற்றும் Ph.D., பட்டமும் பெற்றேன். மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பேசியுள்ளேன். அங்கங்கு நடைபெற்ற சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள World institute of Scientific Exploration WISE – USAயில் ரிசர்ச் சயின்டிஸ்டாக  நியமனம் செய்யப்பட்டேன்.

அஹம் அக்குபஞ்சர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை துவக்கி கடந்த பல வருடங்களாக நடத்தி வருகிறேன்.

நம் உடலில் உயிர்சக்தியின் இயக்கத்தில் மாறுதல் அல்லது பஞ்சபூத இயக்கத்தின் சீர்குறைவால் நோய் ஏற்படுகிறது என அக்குபஞ்சர் தத்துவம் கூறுகிறது.

நம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியை உயிர்சக்தி அல்லது பிராண சக்தி என்கிறோம். அந்த உயிர்சக்தி உடலினுள் இருக்கும்வரைதான் இயக்கங்களும் இருக்கும். ஆக உடல் முழுவதிலும் இந்த சக்தியை நடத்திச் செல்லும் சக்தி ஓட்டப்பாதைகள் உள்ளன. இவற்றை அக்குபஞ்சர் மெரிடியன்கள் அல்லது சானல்கள் என்கிறார்கள். ஆக..

உடலில் 14 மெரிடியன்கள் / சானல்கள் உள்ளன. அவற்றில் 361 அக்குபிரஷர் / பஞ்சர் புள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு சானலுக்கும் அதற்கே உரிய புள்ளிகளின் எண்ணிக்கை அமைந்துள்ளன. எந்த வியாதிக்கு, எந்த அக்குபிரஷர் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி படிப்பதுதான் டிப்ளமோ இன் அக்குபஞ்சர். மற்றும் அட்வான்ஸ்ட் டிப்ளோமா இன் அக்குபஞ்சர் ஆகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த, ஒருங்கிணைந்த மருத்துவம் அக்குபஞ்சர் முறையில் மனக்கோளாறு, முதுகுவலி, தூக்கமின்மை, நீரிழிவு, தைராய்டு, ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம், மூட்டுவலி கால்நரம்பு வாதம், தோள்பட்டை வலி, அலர்ஜி, அல்சர், தலைவலி, மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆக, ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபஞ்சர் சிகிச்சை அவசியமாகிறது.

இதைக் கருத்தில் கொண்டே, எங்களின் அஹம் அக்குபஞ்சர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கிறது. பயிற்சியில் சேருவோருக்கு 10 சதவீதம் சலுகையும் அளிக்கிறோம்.

நோயற்ற வாழ்வு பெற, எங்களின் மருத்துவ சேவை/பணி அமைந்துள்ளதில் பெருமை கொள்கிறோம்.

தொடர்புக்கு:9444052660