மாநிலக் கல்லூரியின் இலட்சிணை எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்கிறோம் என்பதுதான். வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான். சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான். இதுவே நம் நிலைப்பாடு. ஆடிய ஆட்டம் என்ன? கூடிய கூட்டம் என்ன? கடைசியில் என்ன? காலமும் நேரமும் மனித வாழ்வின் இதயத் துடிப்புகளை இயக்கி வைக்கின்றன.

வந்தவர்களெல்லாம், பிறந்தவர்கள் எல்லாம் இங்கேயே தங்கிவிட்டால் இருக்க இடம் எங்கே? எழுபத்தைந்து விழுக்காட்டை கடல் கொண்டுவிட்டது. இருபத்தைந்தில் வாழ்ந்து கொண்டே நாம் ஏதேதோ ஆசைப்படுகிறோம். இந்த பூமியோ நமக்கானது போல ஒரு பேராசை. இறப்பு என்பது உறங்குவது போல & பிறப்பு என்பது உறங்கி விழிப்பது போல என்கிறார் வள்ளுவர். ஜிளி ஞிமிணி ஜிளி ஷிலிணிணிறி என்கிறார் ஷேக்ஸ்பியர்.

இந்த நிலையாமைக்குள்தான் மனிதன் ஆடுகிறான்.. பாடுகிறான்.. பரிதவிக்கிறான்.. பிறரைப் பாடாய் படுத்துகிறான். இருப்பதற்குள் எல்லாவற்றையும் அனுபவிப்போமே என்பது சிலரின் வாதம். இன்பத்தின் மறுபக்கம் துன்பம் என்பதை மறந்து விடுகிறான்.

இரண்டு பக்கங்கள் இல்லாமல் ஏதுமில்லை. உண்டென்றால் இல்லை என்பதும் உண்டு. இரு துருவங்கள் போல வாழ்விற்கு எதிர்மறை, நேர்மறை என்று இரண்டு உண்டு. இரண்டும் சேர்ந்தால்தான் ஒளி தரும். ஏற்றத்தையும், இறக்கத்தையும், உயர்வையும் தாழ்வையும் எவன் ஒருவன் சமமாக கருதுகிறானோ அவனே மனிதன்.

நேற்றிருந்தவன் இன்றில்லை என்பதுதானே இவ்வுலகத்தின் பெருமை. இந்த நிலையாமையை அறிந்திருந்தும் கூட ஆட்டம் போடுகிறான். பிறரை அழித்து ஆணவம் கொள்கிறான். மருத்துவமனையின் பிணவறையும், மயான பூமியம் நமக்கு கற்றுத் தருவது ஏராளம். நாளை மறுதினம் அமெரிக்கா சென்று நோயாளிகளைப் பார்த்து குணப்படுத்த வேண்டிய ஒரு மருத்துவர் இன்று வந்த ஒரு சூறாவளியில் சிக்கி மாள்கிறார்.

ஆண்டின் பிறப்பில் இப்படி ஒரு அவலமா என எண்ணலாம். அந்த அவலம் புரிந்தால் புத்தாண்டு பொலிவுடன் இருக்கும்.

அன்புடன்
ஜி.ராஜமோகன்