பேராசிரியர் டாக்டர் உஷார் ரவி,B.N.Y.S,Ph.D,

ரியான உணவுப் பழக்கம் இருந்தால் ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழலாம்.ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது,பசியை உணர்ந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பெறும் வகையில் உணவை உட்கொள்வதாகும். உணவில் அறுசுவை முக்கியம்.இனிப்பு, புளிப்பு,கார்ப்பு,கசப்பு, உவர்ப்பு,துவர்ப்பு ஆகியவைதான் அறுசுவை.உணவில் அனைத்து சுவைகளையும் சேர்த்துக் கொள்வது அவசியம்.அறுசுவை உணவுகள் சமச்சீரான உணவுக்கு அடித்தளமாக அமைகின்றன. உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் வழங்குகின்றன.

சாப்பாடு பசிக்கா… ருசிக்கா?என்று ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பார்கள். பலரும் ருசிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால்தான் கசப்பு, துவர்ப்பு சுவைகளை மறந்து விட்டோம்.

நமக்குத் தேவையானதை சாப்பிடாமல் ருசிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததால்,நமது ஆரோக்கிய வாழ்வு நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. நமது முன்னோர்கள் அறுசுவையின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்திருந்தார்கள்.

கசப்பும்,துவர்ப்பும் கேடயங்களாக செயல்பட்டு உடலுக்குள் நோய்களை அண்ட விடாமல் தடுக்கின்றன.நமது உணவுப் பழக்கத்தோடு இவ்விரு சுவைகளையும் ஆராதிக்க வேண்டியது, ஆரோக்கியத்தை விரும்பும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இயற்கை மருத்துவத்தில கசப்பும்,துவர்ப்பும் பல உடல் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கின்றன. கசப்பு சுவை, குறிப்பாக துவர்ப்பு சுவையுடன் சேர்ந்து, சாதாரண காய்ச்சல் மற்றும் ஹெச்.ஐ.வி போன்ற நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கசப்பு,துவர்ப்பு ஆகிய சுவைகள் நாக்கில் படும்பொழுது நாக்கிலுள்ள சுவை மொட்டுக்கள் அவற்றை நெருப்பு சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்புகின்றன. நெருப்பு சக்தி மூலமாக இயங்கும் இதயம்,இதயத்தின் மேல் உறை, சிறுகுடல்,உடல் வெப்பக் கட்டுபாட்டு உறுப்பு ஆகியன இச்சுவைகளால் நலம் பெறுகின்றன. விஷக்கடியால் உடலில் நெருப்பு சக்தி குறையும்போது சிறியா நங்கை, பெரியா நங்கை மூலிகைகளில் உள்ள கசப்பு உடலில் நெருப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்வதால் விஷம் வேகமாக பரவாமல் தடுக்கப்படுகிறது.

துவர்ப்பு,கசப்பு சுவைகள் மனதிற்கு தெம்பையும் துணிச்சலையும் தருகின்றன. கசப்பான,துவர்ப்பான பொருள்களை சாப்பிடுவதன் மூலமாக இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். துணிவும் பெற முடியும்.

கசப்பு சுவை

பொதுவாக ஆறுவிதமான சுவைகளில் கசப்புச் சுவையை விரும்பி சாப்பிட முடியாததுதான். ஆனால்,அந்த சுவைதான் பல உடல்நலக் கோளாறுகளை நீக்கும் ஆற்றல் பெற்றது. அஜீரணத்தால் ஏற்படும் குமட்டல், நாக்கில் ஏற்படும் சுவையின்மை ஆகிய வற்றை போக்குகிறது.கசப்பு சுவை பித்தம் மற்றும் கப தோஷங்களை சமநிலைப்படுத்துகிறது.இதனால் உடல் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது.

கடும் தாகம்,நா வறட்சி,குடலில் விஷக் கிருமிகளின் தொற்று,தோல் நோய்கள்,மயக்கம், கிறுகிறுப்பு,பித்த எரிச்சல்,கபம், கொழுப்பு,தாது கோளாறுகள், அழற்சி,ஜீரண கோளாறு ஆகியற்றை சரி செய்கிறது.உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. சிறுநீரில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்கு கசப்பு சுவை உத்தரவாதம் தருகிறது.கசப்பு சுவை கொண்ட உணவுகளில் புற்றுநோய் எதிர்ப்பு சக்திகள் பெருமளவில் உள்ளன என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பூண்டு,எள், வேப்பம்பூ,ஓமம், பாகற்காய், சுண்டைக்காய், அதலைக்காய்,கீரை வகைகள்,அகத்தி, வெந்தயம், மணத்தக்காளி, கொத்த மல்லி, தூதுவளை,முளைக் கீரை,அரைக் கீரை, முருங்கைக் கீரை இவற்றின் கசப்புக்குள் ஆரோக்கியம் ஒலிந்துள்ளது.கசப்பு சுவை கொண்ட உணவுகளில் மஞ்சள்,பச்சை காய்கறிகள் மற்றும் மூலிகை தேநீர் ஆகியவை அடங்கும்.மேலும் அருமருந்தாய் பயன்படும் ப்ரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்ப்ரவுட், முட்டைக்கோஸ், காலே,முள்ளங்கி மற்றும் அருகுலா போன்ற கசப்பு ருசி காய்கறிகளின் பட்டியல் நீளமானது.

துவர்ப்பு என்ன செய்யும்

நோய் எதிர்ப்பில் அதிரடிப்படையாக துவர்ப்பு சுவை செயல்படுகிறது. உடலில் ரத்தத்தை பெருக்கி அதன் சுழற்சியை மேம்படுத்துகிறது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும்.மற்ற சுவைகளைச் சமன் செய்கிறது. ரத்தசோகை,பித்த நோய்,ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, ஆறாத புண்கள்,ரத்த அழுத்தம் ஆகியவற்றை சரிசெய்வதில் பெரும் பங்காற்றுகிறது. ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள உப்பு படிவங்களை கரைக்கிறது. முக்கியமாக உண்ட உணவைச் செரிக்க வைக்கிறது.

எச்சரிக்கையாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.துவர்ப்பு சுவையை தவிர்ப்பதன் விளைவாகவும் சர்க்கரை நோய், இதய நோய்,ரத்த அழுத்தம்,கருப்பை நோய்கள் ஏற்படலாம்.

துவர்ப்பு உணவு பொருள்கள்

வாழைக்காய், மாதுளை,மாவடு, மஞ்சள்,அத்திக்காய், பப்பாளி,மாங்காய், பலாக்காய் மற்றும் நெல்லிக்காய், கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி,பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உள்ள துவர்ப்பு சுவை உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் சேர்க்கிறது.

தகவல் தொடர்புக்கு;

தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர் வேதிக் கிளினிக்,
எண்: 11,பாரதிதாசன் தெரு,
பிள்ளையார் கோயில் எதிரில்,
மஞ்சக்குப்பம்,
கடலூர்-607001.
93676 22256