ங்களுக்குக் கண்கள் இருட்டுவது போன்றோ. மயக்கம் வருவது போன்றோ அறிகுறிகள் ஏற்பட்டால் உங்கள் தலை கீழே இருக்குமாறு உடல் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். அதாவது படுத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து அறிகுறிகள் குறையும். உங்களால் படுத்துக்கொள்ள இயலாதபோது முன்பக்கமாக உடலைச் சாய்த்துக் கால்களுக்கிடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.

தடுக்கும் முறைகள்

உங்கள் உடல் நிலையை மெல்ல மாற்றுங்கள். ஒரு நிலையிலிருந்து சடாரென மற்றொரு நிலைக்கு மாறாதீர்கள். புரண்டு படுக்கும் போதும் திடீரெனப் புரளாதீர்கள். படுத்த  நிலையிலிருந்துதிடீரென எழுந்து நிற்காதீர்கள். குறிப்பாக, காலையில் படுக்கையிலிருந்து எழும் முன்னர் சற்று நேரம் படுக்கையில் அமர்ந்திருங்கள். எழுந்த பின்னர் உடன் நடக்காமல் சில நிமிடங்கள் நின்று பின் நடக்கவும்.

கடும் வெயில் அல்லது புழுக்கத்தில் நடக்கும்போது ஒரு சில நிமிடங்கள் இடைவெளி விட்டு நின்று பின் நடக்கவும்.

 வெயிலுக்கு ஏற்றவாறு வெப்பம் தாக்காத உடைகளை அணியவும்.

நிறைய நீர் பருகுங்கள். இது நீரிழப்பைக் குறைப்பதுடன், இரத்த ஓட்டச் சுழற்சியையும் சீராக வைத்திருக்கும்.   புகை பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். மது அருந்தாதீர்கள்.  தவறான மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்,  உங்களுக்கு மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால் வண்டி ஓட்டாதீர்கள். ஆபத்து விளைவிக்கும் இயந்திரங்களை இயக்காதீர்கள்.

மாடிப்படிகளில் ஏறாதீர்கள் அல்லது இறங்காதீர்கள். உங்கள் மருந்துகளையும் மருந்தளவையும் மருத்துவர்களிடம் காட்டிச் சரிபார்த்துக்கொள்ளவும்.

லேசான அறிகுறிகள்கூட வாரக் கணக்கிலோ அல்லது மாதக் கணக்கிலோ நீடித்தால் அது ஆபத்தான நரம்பு மண்டல நோய்களாக இருக்கக்கூடும். பின்மூளை (சிறுமூளை) பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படும்போது கடும் உமட்டல், வாந்தி, சிறுகிறுப்பு, தலைச்சுற்றல், இரட்டைப் பார்வை போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவ்வறிகுறிகளுக்கு உடன் அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படும்.