பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கினால் சின்னச் சின்ன தொந்தரவுகள் வரலாம்.பிறப்பு உறுப்பு பகுதியில் புண்கள்,அரிப்பு போன்றவை வருவது சகஜம். வெளிப்புற வெப்பம்,வெஜைனா பகுதியில் வியர்வை, கூடவே நாப்கின் உபயோகம் என எல்லாம் சேரும்போது அந்தப் பகுதியில் புண்கள் வருவது இயல்புதான்.இதைத் தவிர்க்க, நாப்கின் உபயோகிக்கும்போதே, தொடை இடுக்குகளில் சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவலாம்.ஒரு வேளை புண்கள் வந்துவிட்டாலும் மருத்துவ ஆலோசனையோடு ஆன்டிஃபங்கல் க்ரீம் உபயோகிக்கலாம்.

அந்தப் பகுதியை வெந்நீரால் சுத்தப்படுத்த வேண்டாம். மாதவிடாய் ரத்தம் அசுத்தமானதல்ல. எனவே, அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டியதில்லை. சோப், பெர்ஃபியூம் போன்றவற்றையும் உபயோகிக்க வேண்டாம்.