
*முடிந்தளவிற்கு பனி மற்றும் மழைக் காலங்களில் வெந்நீரை அருந்த வேண்டும்.
*ஒருவர் இருமும் போது நோய்க்கிருமிகள் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆகையால் முதியவர்கள் கூட்டம், நெரிசல் அதிகமுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.
*உணவு விடுதிகளில் சாப்பிடுவதை முடிந்தளவிற்கு தவிர்க்க வேண்டும்.
*ஐஸ் கிரீம் மற்றும் குளிர்பானங்களில் நுண்ணுயிர் கிருமிகளின் வளர்ச்சி அதிகம் உள்ளது. கூடுமானவரை அவற்றைத் தவிர்க்கவும்.
*உடல் சுகாதாரம் மிகவும் அவசியம். தினமும் இரண்டு முறை குளித்து உடை மாற்றுவது நல்லது.
*இஞ்சி,தயிர், பாகற்காய்,காளான், கிரீன் டீ,தேன், பேரிச்சம் பழம், பாதாம்,காய்ந்த திராட்சை ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை.இவற்றை அவ்வப்போது தொடர்ந்து எடுத்துக் கொள்வது அவசியம்.
*உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், ஆரஞ்சு,எலுமிச்சை, பாதாம்,கொட்டை வகைகள் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
*முடிந்தளவிற்கு தண்ணீர் அதிகம் அருந்தி,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்.
.*பிறப்புறுப்புகளின் சுத்தம் மிகவும் அவசியம்.
*தடுப்பூசி,ப்ளூ, நிமோனியா, டைபாய்டு,மற்றும் டெட்டனஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.
*தனிமையை தவிர்க்க வேண்டும்.அருகில் உள்ள நண்பர்களோடு கலந்து பேசுங்கள்.
*முகநூலில் சேர்ந்து அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களை கவனித்து வாருங்கள்.
*எண்ணெய் பலகாரங்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

