
-டாக்டர்.சு.முத்து செல்லக்குமார்,எம்.டி
குழந்தைகளுக்கு, வாழைப்பழம் சக்தி தரக்கூடிய சிறந்த உணவு. மலச்சிக்கலைத் தடுக்கும். வைட்டமின்களும் நிறைந்தது. நல்ல சுவையுடையது என்பதோடு, எளிதாக ஜீரணமும் ஆகக்கூடியது. எனவே, வாழைப்பழத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்குப் பல்வேறு வகையான உணவுகளைத் தயாரித்துக் கொடுக்கலாம்.
நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்துக் கொடுக்க வேண்டும்.

பாலும் பழமும்
நன்கு காய்ச்சிய பாலுடன் வாழைப்பழத்தை மசித்துச் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கலாம்.
பால் – பழம் – முட்டை உணவு
நன்கு காய்ச்சிய பாலை ஆற வைத்து அதில் வாழைப்பழத்தை யும், வேகவைத்த முட்டையின் வெண்கருவையும் சேர்த்து மசித்துக்கொடுக்கலாம்.
தயிர் – வாழைப்பழ உணவு
பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்து பல்வேறு உணவுகளைத் தயாரித்து குழந்தைகளுக்குக் கொடுப்பதுபோல் தயிரையும், வாழைப்பழத்தையும் சேர்த்து குழந்தைக்கான உணவைத் தயாரிக்கலாம்.
நன்கு பழுத்த வாழைப்பழத்தை நன்கு பிசைந்து அத்துடன் அதிகப் புளிப்பு இல்லாத தயிரைக் கலந்து குழந்தைகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.
பிஸ்கட்,சிப்ஸ்,குர்குரே போன்ற சத்துக்கள் இல்லாத உணவுகளை தவிர்த்து தரமான சத்துக்கள் நிறைந்த பழங்களை தருவது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.ஞாபக சக்தியையும் வளர்க்கும்.

