நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள கல், நமது உடலுக்குள் சென்று சிறுநீரகத்தில் அடைத்து மோசமாக பாதிக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.அது உண்மையா டாக்டர்?

-ஏ.கணபதி, கோயம்புத்தூர்.

அது உண்மையில்லை.சிறுநீரில் ஒருவருக்கு அதிகமாகக் கால்சியம் ஆக்சலேட், யூரிக் ஆசிட் போன்ற உப்புகள் வெளியேறும்போது, அவை படிந்து கற்கள் உருவாகின்றன.நிறைய பேருக்கு இந்த உப்புகள் வெளியேறும் தன்மை மரபணு ரீதியாக இருக்கும்.உணவில் இருக்கும் கால்சியம் ஆக்சலேட்கூட அந்த அளவுக்கு இந்தப் பிரச்னையை அதிகமாக்குவது கிடையாது என்பதுதான் உண்மை.மற்றபடி உணவில் தவறுதலாக வரும் கற்கள் நமது ரத்தத்தில்கூடக் கலக்காது.அப்படியே ஜீரணமாகாமல் மலத்தில் வெளியேறிவிடும்.
அரிசியில் கல் இருக்கக்கூடாது.அப்படியே இருந்தாலும் அவை சிறுநீரகத்தை பாதிக்காது.