
நம்முடைய மூளையின் இடது பகுதியில் லாஜிக்கல் திங்கிங், வலது பகுதியில் எமோஷனல் திங்கிங் உள்ளது.வலது மூளை உடலின் இடப்பக்கத்தையும், இடது மூளை வலப் பக்கத்தையும் செயல்படுத்துகிறது. பிரச்னைகளின்போது இருபக்க மூளைகளின் செயல்பாட்டையும் ஒரு சேரப் பெறுவதே சரியான தீர்வெடுக்க உதவும்.
வலது கையைக் கொண்டு இடது காலின் பெருவிரலைத் தொடுவது இடது கையைக் கொண்டு வலது காலின் பெருவிரலைத் தொடுவது, கைகளை க்ராஸ் செய்து ஸ்ட்ரெச் பண்ணுவது என உடலின் வலது பகுதியையும் இடது பகுதியையும் ஒருங்கிணைக்கக் கூடிய பயிற்சிகளைச் செய்து விட்டு பிரச்னைகளுக்கு முடிவு எடுத்துப் பாருங்கள், அது சிறந்த முடிவாக இருக்கும். லாஜிக்கல் எமோஷனல் இரண்டையும் ஒரு சேர கவர் பண்ணியதால் முழு மூளையின் திறனைக் கொண்டதாக இருக்கும்.

