சைவம் சாப்பிடுபவர்களில் மீனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆடு, மாடு…என மற்ற இறைச்சிகளோடு ஒப்பிடும்போது,மீன் உணவால் அதிக தீங்கு இல்லை என்றே சொல்லலாம்.இதில் புரோட்டீன், வைட்டமின் டி மற்றும் செலினியம்  போன்ற ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. 

நெத்திலி போன்ற சில வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது.இது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்;இதயத் துடிப்பைச் சீராக்கும்;

இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்.

ஆண், பெண் இருவருக்குமே உகந்தது மீன் உணவு.பக்கவாதம் வராமல் காக்கும்; மனஅழுத்தத்தைக் குறைக்கும்.மனரீதியான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். ஏனெனில், இதில் இருக்கும் ‘டி.ஹெச்.ஏ’ (DHA – Docosahexaenoic acid )எனும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது.

மீன் உணவு இதயத்துக்கு நலம்!உடலுக்கு பலம்! மனதுக்கு நலம்!.