– எம்.கே.மோகன்சுந்தர்

‘தாயைப் போல பிள்ளை’ & நம் முன்னோர்கள் சொன்ன அறிவுபூர்வமான, அனுபவ ஞானத்தின் வெளிப்பாடாக உதிர்த்த மூன்று வார்த்தைகளைக் கொண்ட ஒரு வாக்கியம் அது.
ஆணோ, பெண்ணோ முதலில் அவர்கள் தங்களை தாங்களே உணர்ந்தார்கள், தன்வழி பிறந்த வாரிசுகளின் மனநிலைகளை செயல்பாடுகளை ஆழ்ந்து கவனித்தார்கள். நல்லது/கெட்டது ஏன்? எப்படி? என்று சிந்தித்தார்கள். அதற்கான மூலத்தை ஆராய்ந்தபோது, தாயின் உதிரத்தில், கருவில் வளரும் குழந்தை தொப்புள் கொடி மூலமே வளர்கிறது. உருவ அமைப்பை பெறுகிறது. இது மறுக்க முடியாத உண்மை என்பதையும் அதைப் போலவே தாயின் மன உணர்வுகள், கருவிலுள்ள குழந்தைக்கும் பதிவாகிறது என்பதும் புலப்பட்டது. அதனால்தான்..
பிறந்த குழந்தை வளர்கின்ற போது அதன் செயல்பாடுகள், வெளிப்படுத்திய தன்மைகளைக் கண்டு ஒப்பிப்பிட்டு, அம்மா பிள்ளை, அப்பா பிள்ளை என்றார்கள்.

அந்த நிகழ்வுகள்/விளைவுகள் ஏன்? எப்படி? என்பதை டாக்டார் ஆண்டாள் பாஸ்கர், ஆந்திர மாநிலம், நெல்லூர் நகரின் புகழ்பெற்ற மருத்துவர் விவரிக்கிறார்.
பூர்வீகம் தமிழகத்திலுள்ள கடலூர். எம்பிபிஎஸ் மற்றும் எம்டி தேர்ச்சி பெற்ற மகப்பேறு மருத்துவர். எனவே கருவுறுதல் மற்றும் மகப்பேறு சம்பந்தமாக/அவசியமான தம்பதிகள் இங்கு வருகிறார்கள்.
மகப்பேறு என்பது ஒரு தவம். பொதுவாக திருமணமான தம்பதியரில் 100 பேருக்கு 80 பேர் மணமான ஒரு வருடத்திலேயே கருத்தரித்து விடுகின்றனர். ஆண்டுகள் சில கடந்தும் கருவுற முடியாத தம்பதியர், தாமதம் ஏன்? எதனால்? என அறிய இங்கு வருகிறார்கள்.

கருதரிக்க இருகாரணங்கள் உண்டு. அவைகள் கருமுட்டையின் தரம், அடைப்பில்லாத கர்ப்பப்பைக் குழாய், விந்தணுக்களின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் செயல்நிலை போன்ற பௌதீக காரணங்கள் மற்றும் நடைமுறைக் காரணங்களான பெண்ணின் மனநிலையை ஒட்டிய ஹார்மோன் செயல்பாடுகள்.

உடல்நிலை சரியான விகிதத்தில் செயல்படும்போது, கருத்தரித்தலைப் பற்றிய எண்ணமே இல்லாதிருந்தும் & கருத்தரிப்பு தானாகவே நடைபெறுகிறது. தம்பதிகளுக்கு மனச்சோர்வு, கவலை, மன அழுத்தம், வேலைப்பளு போன்ற காரணங்களால் ஹார்மோன்களின் செயல்பாடு குறையும்போது கருத்தரித்தல் தாமதமாகி விடுகிறது. எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் கர்ப்பமடைய முடிவதில்லை. தாங்கள் சந்திக்கும் நல்ல நிகழ்வுகளால் மனநிலை மாற்றம் பெறும்போது, அவர்களே ஆச்சரியப்படும்படி கர்ப்பம் தரிக்க முடிகிறது.

தம்பதிகள் சிலர் கர்ப்பம் என்பது இயற்கை நிகழ்வு என்பதை மறந்து போவதாலும், கர்ப்பம் கடினமான மற்றும் தீர்க்க முடியாத நோய் எனத் தவறாக எண்ணி, அதற்கான சிகிச்சையிலும் நம்பிக்கை கொள்ளாதிருப்பதாலும், சில மாற்றங்களுக்கான சிகிச்சையைப் பெற்ற பின்பும் கர்ப்பமாக முடிவதில்லை. எனவே திருமணமான பெண்களுக்க கர்ப்பம் மற்றும் பிரசவம் பற்றிய விழிப்புணர்வு அளிக்கிறோம். அவசியத்தின்படி கூடவே மருத்துவ சிகிச்சையும் அவர்கள் பெறுகிறார்கள். குழந்தைப்பேறும் அடைகிறார்கள்.

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தேவையான சத்தான உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் என எல்லாவற்றிற்கும் எங்களின் ஆலோசனை, கவுன்சலிங், யோகா பயிற்றுவித்தல் மூலமாக தயார் செய்து கொள்கிறார்கள்.

எங்களின் டாக்டர் ஆண்டாள்ஸ் லஷ்மி கருத்தரிப்பு ஆராய்ச்சி மற்றும் அறுவை சிகிச்சை மையம் 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, அரிய மகப்பேறு சேவை செய்து வருகிறது. இதுவரை சுமார் 25 ஆயிரம் பெண்கள் இம்மருத்துவமனையின் சிகிச்சையில் பயன் பெற்றுள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக மாதத்திற்கு 3 நாள்கள் கர்ப்பிணி பெண்களுக்கும், மாதத்திற்கு ஒருநாள் கருத்தரிக்க காத்திருப்பபோருக்கும், மாதமிருமுறை எல்லோருடனும் கலந்தாலோசனையை நானும் என் கணவர் டாக்டர் பாஸ்கர் அவர்களும் அளிக்கிறோம். எங்களின் மருத்துவ சேவையில் அவரின் பங்களிப்பும் சிறப்பானது.

வழக்கத்திலுள்ள கருத்தரிப்பு & சிகிச்சையை வழங்குவதோடு, தம்பதியரின் நலன், குழந்தைப்பேறு அவர்களுக்கு பயனளிக்கவும் வேண்டும், பிறக்கவுள்ள குழந்தையும் நல்லுணர்வுகளோடு பிறந்து வளர்ந்து சிறந்த மனிதர்களாக வேண்டும் என சிந்தனை மேலோங்கியதால் ‘டாக் டூ பேபி’ & பயிற்று முறையையும் பரிந்துரைக்கிறோம்.

புராணத்திலும், வரலாற்றிலும் மட்டுமல்ல, தற்காலத்திலும் கருவிலிருக்கும் குழந்தையிடம் தாய் பேச முடியும். தாயின் பேச்சைக் கேட்டு வளரும் சிசு தாய்க்கு பிரசவ வலியை அதிகம் கொடுப்பதில்லை. தாயின் பேச்சுக்கெல்லாம் அந்த சிசு தனது உடல் அசைவுகளால் பதில் அளிக்கிறது. இதன்மூலம் தாயின் கருவறையே குழந்தையின் முதல் கல்வியறையாக அமைகிறது. தாயே தன் சிசுவிற்கு முதல் குருவாகி தன் மன உணர்வுகளை சிசு புரிந்து கொள்ளச் செய்கிறார்.

தாயின் கருவறையில் சிசு உருவாகத் தொடங்கும்போதே, தன் சிசுவுடன் பேசுவதைத் தொடங்க வேண்டும். ஒன்பது மாதங்கள் வரை தொடர்ந்து பேசுவது, பாடுவது, விளையாடுவதன் மூலம் கருவில் இருக்கும் சிசுவுடன் ஆழமான, அழகான பந்தம் இதன் மூலம் ஏற்படுகிறது என்பதை தனது 25 ஆண்டு கால மருத்துவ அனுபவம் மூலமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்களை பார்த்ததின் மூலமும் உணர்ந்திருக்கிறேன்.

கருவிலுள்ள குழந்தை கேட்கும் சக்தியையும், தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சக்தியையும் தன் 16வது வாரத்திலேயே பெற்று விடுகிறது. அம்மாவின் குரலை நன்கு உணர்ந்து கொள்கிறது. தன் உணர்ச்சிகளை, அசைவுகளை வெளிப்படுத்தும் சக்தியையும் 22வது வாரத்திலேயே பெற்றுவிடுகிறது. தாயின் இதய ஒலியை மட்டுமே தொடர்ந்து கேட்பதால் நெருக்கமான உறவு கொள்கிறது. கருவில் இருக்கும்போதே கேட்கும் சக்தி, உணரும் சக்தி, நுகரும் சக்தி மற்றும் பார்வையும் பெற்றுவிடுகிறது. இனை அனைத்தும் சாத்தியமாவதால்..

கருவுற்ற தாய், தன் சேயின் எதிர்கால நலனைக் கருதி & நல்ல புத்தகங்களை வாசித்தல், நல்ல சிந்தனைகளில் ஈடுபடுதல், பேசுதல், இசை கேட்டல், பிறரிடம் அன்பு, பாசம் பாராட்டும் நீதிகளைப் பற்றி பேசுதல், விவாதித்தலில் எல்லாம் ஈடுபட..

பிறக்கும் குழந்தை சமுதாயத்தில் ஒரு நன்மகனாகவோ, நல்ல மகளாகவோ பிறப்பிக்கச் செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டு ‘டாக் டூ பேபி’ முறையை பின்பற்ற வேண்டும். அதனால் தாயே குழந்தையின் முதல் குரு என்ற நிலையை அடைய முடியும் என்கிறார் டாக்டர் ஆண்டாள் பாஸ்கர்.
தகவல் தொடர்புக்கு

WELL PLANNED PARENTS
WELL PLANNED BABY
DR.S. Andal Bhaskar, MD., D.G.O.,
Dr. S. Bhaskar, MD., D.A.,
Dr. Andal’s Lakshmi Fertility Research & Laparoscopic Surgical Centre,
16-2-94, S2, Cinemas, Pogathota,
Nellore – 524001. AP
Email : andalbskr@gmail.com
Ph : 0861-2327018, 2341870
www.drandalslakshmifertilityclinic.com