
கிராமங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி விஷக்கடிக்கு ஆளாக நேரிடும்.அவர்களுக்கு உதவக்கூடியது இந்த மூலிகை. கொடிப்பாலை என்பது இதன் இன்னொரு பெயராகும்.விஷப் பூச்சிகள் மற்றும் எவ்வகையான விஷமும் உடலில் சென்று அதனால் ஏற்படும் கோளாறுகளை போக்க நஞ்சு முறிஞ்சான் பயன்படுகிறது.
நஞ்சு முறிஞ்சான் கொடியை வேருடன் எடுத்து,கழுவி நறுக்கிக் காயவைத்து, அத்துடன் மிளகையும் சேர்த்து இடித்து, சலித்து சீசாவில் வைக்கவும்.இதை காலை மாலை 1/2 ஸ்பூன் எடுத்து தேன் சேர்த்து கொடுத்துவர எந்த வகையான நஞ்சும் முறிந்துவிடும். நஞ்சின் பாதிப்புகள் மாறிவிடும்.

