
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள்.
தினமொரு ஆப்பிள் சாப்பிடுவதென்பது எல் லோருக்குமா சாத்தியம்? ஆப்பிளுக்கு இணையாக,ஏன், ஆப்பிளைவிட அதிகமான நற்குணங்கள் வாய்ந்தது நெல்லிக்காய்.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே ஆயுளும் ஆரோக்கியமும் இள மையும் நீடிக்கும். அதியமானால் ஔவையாருக்கு வழங்கப்பட்ட நெல்லிக்கனிக்கு, அன்று முதல் இன்று வரை மாறாத புகழ் உண்டு.
நெல்லிக்காயை காயகல்ப மூலிகை என்றே சொல்லலாம்.நரை,திரை, மூப்பு விலக்கும் அற்புதம் நிறைந்தது.
வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. நெல்லிக்காயை எந்த வடிவத்தில் மாற்றினாலும் வைட்டமின் சி இழப்பு ஏற்படுவதில்லை. காய வைத்தாலோ, வேக வைத்தாலோ கூட அதன் வைட்டமின் சி அப்படியே இருக்கும். தினம் ஒரு நெல்லிக்காய் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு சாதாரண காய்ச்சல், சளி,இருமல் பிரச்னைகள் வராது. நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
நெல்லிக்காய்க்கு கொழுப்பை விரட்டும் குணமும் உண்டு என்பதால் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறுடன் இஞ்சிச்சாறு கலந்து குடித்தால் கொழுப்பு கரையத் தொடங்கும். புற்றுநோய்க்கு எதிராக போராடும் ஆற்றலை உடல் வளர்த்துக் கொள்ளவும் தினம் ஒரு நெல்லிக்காய் கொள்கை உதவும்.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத் துவத்தில் நெல்லிக்காய்க்கு மிக முக்கிய இடமுண்டு. அவர்களது பெரும்பாலான மருந்துத் தயாரிப் புகளில் நெல்லிக்காயின் கலப்பு கட்டாயம் இருக்கும்.மிகப் பிரப
லமான திரிபலா சூரணம் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலப்பே.
இன்று வயது வித்தியாசமின்றி, எல்லாப் பெண்களையும் பாதிக்கிற பிரச்னை அனீமியா என்கிற ரத்தசோகை.ரத்த சோகையை விரட்ட இரும்புச்சத்து அவசியம். இரும்புச்சத்து உடலினுள் கிர கிக்கப்பட வேண்டும் என்றால் வைட்டமின் சி அவசியம்.எனவே, ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து

