டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu).


டாக்டர் ஆர்.பானுபிரியா, BAMS, MD(Acu), M.B.A(HM).

ரு நல்ல மருத்துவர், நாடி பிடித்து கட்டைவிரல் கீழே உள்ள ரத்தக்குழாயை தன் மூன்று விரல்களால் அழுத்தி,நோயையும் அதன் தன்மை குறித்தும் சொல்லிவிடுவார். இது நம் பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பாகும்.

ஆனால்,ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே அவரின் உடல் மொழி,நடை, பார்வை,பேச்சு ஆகியவற்றின் மூலம் நோய்களை கண்டறிவது தனிச்சிறப்புக்குறியதாகும்.

தொடுதல் இன்றி, பார்வையின் மூலமே நோய்களை கண்டறிந்து சிகிச்சையும் வழங்கும் நோக்கு வர்மம் நம் பாரம்பரிய மருத்துவ கலையாகும்.
சித்தர்கள் தங்கள் பார்வைாயால் நோய்களை குணப்படுத்திய வரலாறுகள் உள்ளன.

மனதை படிக்கும் மருத்துவர்கள்

ஆழ்ந்த அறிவு, அனுபவம்,தெளிந்த மன நிலை கொண்ட மருத்துவர்கள், மனதை படிக்கும் ஆற்றல் உடையவர்களாக இருக்கின்றனர். ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அக்குபஞ்சர் மருத்துவத் துறைகளின் வல்லுநர்கள் இதில் நிபுணத்துவம் கொண்டவர்கள்.
இது போன்ற மருத்துவர்களின் திறமைகளைக் கண்டு வியந்தே அவர்களை “கை ராசி மருத்துவர்கள் ” என்று மக்கள் கொண்டாடுகின்றனர்.

நோய் முதல்நாடி

உள்ளும்,புறமும், உடலும்,வெளி எண்ணங்களும் ஒன்றுபட்டு,ஒன்றை ஒன்று சீராக சார்ந்திருப்பது ஆரோக்கியமாகும். இவற்றில் மாறுபாடுகளும் குறைபாடுகளும் ஏற்படும்போது நோய்கள் உருவாகின்றன.

பேசும் கண்கள்

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது புகழ் பெற்ற முதுமொழி. கண்களைப் பார்த்தே ஒருவரின் நோய் ஜாதகத்தை கணித்துவிடலாம். அதற்காக நாம் முயற்சிக்க வேண்டியதில்லை. கண்களின் நிறமும் தன்மையுமே நோய்களை காட்டிக் கொடுத்து விடும். காமாலை (Liver problem)நோய் தாக்கம் உள்ளவர்களின் கண்கள் அடர் மஞ்சளாக இருக்கும்.ரத்தசோகை நோயாளர்களுக்கு கண்ணின் வெள்ளைப் பகுதி மங்கலாக இருக்கும். சிவந்த கண்கள், அரிப்பு மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் சொல்லும்.தூக்கக் குறைபாடு உள்ளவர்கள்,மன நலன் பாதிக்கப்பட்டிருக்கிறவர்களுக்கு கண்களுக்கு கீழே கருவளையம் சுருண்டிருக்கும்.

முகம் பொய் சொல்லாது

வெண்மையாகவும் சாம்பல் படர்ந்தும் இருந்தால் ரத்தசோகையை உறுதி செய்துவிடலாம். பருவ வயதில் முகத்தில் அதிகமாக காணப்படும் பிம்பிள்ஸ்கள் ஹார்மோன் மாற்றத்தை தெரிவிக்கின்றன.

வாயும் நோயும்

நீர்ச்சத்து குறைந்தவர்களின் உதடுகள் உலர்ந்த சருகுகள் போல காட்சி தரும்.வயிறு கோளாறு,பல் பிரச்னை உள்ளவர்களை அவர்களின் வாய் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடும். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்களின் அடையாளமாக இருக்கும்.

நாக்கு சொல்லும் கதை

கல்லீரல் கோளாறுகள் உள்ளவர்களின் நாக்கு மஞ்சள் நிறமாக இருக்கும். வெள்ளை நிற நாக்கைப் பார்த்து கபத்தையும் சுவாச கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். இதயம் பாதிக்கப்பட்டவர்களின் நாக்கில் வெளிர் நீலம் படர்ந்திருக்கும். அதிக பித்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நாக்கு சிவப்பு மற்றும் பச்சையாக இருக்கும்.வாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நாக்கு பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும்.

பற்களைப் பார்த்து பேசு

பேசும் போது எதிரே உள்ளவர்களின் பற்களை கவனித்து பேசினால் ஓரளவு அவரின் உடல்நிலையை கணித்து விடலாம்.

பற்கள் தளர்ந்தே உடைந்தோ காணப்பட்டால் அவருக்கு வாதம் உடலில் அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறி.கால்சியம் அளவு குறைபாட்டையும் அது சுட்டிக்காட்டுகிறது.
பற்களின் ஈறுகள் சிவந்து வீக்கத்துடன் ரத்தம் வடிந்தால் உடலில் பித்தத் தன்மை அதிகம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.உடல் சூட்டின் அதிக அளவையும் சொல்லாமல் சொல்கிறது.பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் கல்லீரல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.பல் அழுகலுடனோ அல்லது கருமை நிறத்துடனோ காணப்பட்டால் பற்கள் சொத்தை ஏற்பட்டுள்ளதையும், நீண்ட கால செரிமான குறைவால் அவர் பாதிக்கப்பட்டு வருவதையும் உணரலாம்.

தலை முடியை கவனி

இரும்பு சத்து,புரதம், வைட்டமின் டி,பி 12 குறைபாடுகள் மற்றும் தைராய்டு, ரத்த சோகை உள்ளவர்களுக்கும் அதிக முடி உதிர்வு ஏற்படும்.
அதிக பொடுகும் வெள்ளை தோல் உதிர்வும் காணப்பட்டால் சுவாச நோய் பாதிப்பு,தூக்கம் குறைவு,தலைச்சூடு ஆகியவற்றை அனுமானிக்கலாம்.
இளமையில் வெள்ளை முடி காணப்படுவது மரபியல் ரீதியானதாகவோ அல்லது ஹார்மோன் மாற்றங்களால் ஆனதாகவோ அறியலாம்.ஆயுர் வேதம் இளமையில் வெள்ளை முடியை பித்த அதிகரிப்பாக குறிப்பிடுகிறது.

உடல் தோற்றம் சொல்லும் நோய்கள்

உங்களால் கூட எளிதில் எதிரே வருபவரின் தோற்றத்தை பார்த்து அவரின் உடல் நிலையை யூகிக்க முடியும்.சத்துக் குறைபாடு உள்ளவர்கள்
எப்போதும் மிகவும் சோர்வாக காணப்படுவார்கள், அதிக பலவீனமாக இருப்பவர்களால் ஓரிடத்தில் நிற்க முடியாது.அருகே இடம் கிடைத்தால் உட்கார்ந்து கொள்வார்கள். ஒருவர் உடல் அல்லது கை கால்கள் நடுக்கத்துடன் இருந்தால் காய்ச்சலோ சர்க்கரை அளவு குறைவோ ஏற்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சிலருக்கு அதிகமாக வியர்வை வந்து கொண்டேயிருக்கும். தைராய்டு பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.மன அழுத்தம் உள்ளவர்களும் இது போன்று ஏற்படலாம்.

நோய் நடத்தைகள்

எப்போதும் உற்சாகமாகவே காணப்படும் ஒருவர் தொடர் சோர்வுக்கு உள்ளானாலோ திடீரென்று அமைதியாக காணப்பட்டாலோ அவருக்கு இரும்புச் சத்து குறைபாடு உள்ளதையும் வைரஸ் காய்ச்சலின் ஆரம்ப நிலையில் அவர் உள்ளதையும் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் நடையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் காட்டக்கூடாது.நடை மாற்றம்,
ரத்த அழுத்தம் அதிகமானால் தலை சுழலும் மயக்கத்தால் அவர் நடையில் தள்ளாட்டம் ஏற்படும். நரம்பு எலும்புகளில் பிரச்னை ஏற்பட்டால் கால்களை இழுத்து நடப்பதில் இருந்து அதனை உறுதி செய்யலாம்.

பாதங்களில் நோய் முகவரி

சித்தாவில் “பாதம்” நரம்பு நிலையைக் காட்டும் முக்கிய புள்ளி என்று கருதப்படுகிறது.
நீர்சத்து தேக்கம், சிறுநீரக பிரச்னை,
இதய செயல்பாடு குறைவு,நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கு பாதம் வீக்கமாக இருக்கும்.பாதம் நீலம் மற்றும் ஊதா நிறமாக மாறினால் ரத்த ஓட்டம், ஆக்சிஜன் குறைபாட்டை அறியலாம்.அதிக குளிர்தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கும் இவ்வாறு காணப்படும்.
பாத வெடிப்பு உள்ளவர்களுக்கு நீர்ச்சத்து, வைட்டமின், தைராய்டு குறைபாடு காணப்படும்.நீரழிவு நோய் அதிகரித்தால் பாதங்கள் மெத்தென்று உணர்ச்சி குறைபாட்டுடனோ எரிச்சல் அல்லது முள் குத்துவது போன்ற உணர்வோ ஏற்படும்.எலும்பு மூட்டு பிரச்னை உள்ளவர்களுக்கு பாதமும் விரல்களும் வளைந்து காணப்படும்.

நோயின் குரல்

ஒருவர் பேசும் விதத்தை வைத்து அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளை ஊகிக்கலாம்.

குரல் கயிறு அழற்சி நோய்,சளி பிரச்னை, தொண்டை தொற்று,
தைராய்டு சீர்கேடுகள் இவற்றில் ஒன்று இருந்தால் கூட பேசும் குரல் தளர்ச்சியாகவோ சோர்வாகவோ காணப்படும். தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் நரம்பு பிரச்னைகளுக்கு உள்ளானவர்கள் மிகவும் மெதுவாக பேசுவார்கள். தொடர்ச்சிாக பேச முடியாமல் சிரமப்படுவார்கள். அதிக நரம்பு பிரச்சினைகளோ சுவாசக் கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களோ பேசும்போது மூச்சுத் திணறல் ஏற்படும்.
ஒருவர் பேசும் போது குழப்பமாகவோ அடிக்கடி பேசும் வார்த்தைகளை மறத்தலோ ஏற்பட்டால் அதிக காய்ச்சல், மன அழுத்தம்,தூக்கம் குறைவு,ரத்த சர்க்கரை குறைவு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

திடீர் பேச்சு தடுமாற்றம் ஒருபக்கம் முகம்,கை பலவீனம்,திடீர் குழப்பம் ஏற்பட்டால் பக்கவாதத்தின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும்.

இது போன்று மருத்துவ அறிவுகளை நம் தொன்மையான தாய் மருத்துவம் காலந்தோறும் கற்றுத் தருகிறது. எங்கள் சுசான்லி நிறுவனத்தில் நாடி பிடித்து நோய் அறிவது மற்றும் வர்மங்கள், அக்குபஞ்சர் ஆகியவற்றின் மூலம் உடனடியாக நோய்களின் தன்மையை அறியும் முறைகள் குறித்து தலை சிறந்த மருத்துவ வல்லுநர்கள் மூலம் பயிற்சிகள் அளித்து வருகிறோம். தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளும் எங்கள் நிறுவனங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. விரும்பினால் நீங்களும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம்.

தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர்,ஆயுர் வேதிக் கிளினிக்,
எண்: 11, பாரதிதாசன் தெரு ,
பிள்ளையார் கோயில் எதிரில் ,
மஞ்சக்குப்பம்,
கடலூர் – 607001
செல் 93676 22256