
பாலின் நிறம் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னணி கறை படிந்தது என்பதை மக்களுக்கு புரிய வைப்பது முக்கியம்.தாய்மார்கள் இயன்றவரை தம் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்ட வேண்டும். தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு பால் உலகில் வேறு எங்கும் இல்லை.
எந்த ஊரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்கு தேவையான அளவுக்கு பால் சுரக்கும் என்பதுதான் இயற்கை.ஒரு தாய் தன் குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கினால் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் பதற்றம் அடைய தொடங்குகின்றன.
குழந்தைகளுக்கு பால் பவுடர் தான் நல்லது என்று நம்ப வைக்க முயல்கின்றனர்.
பெரியவர்கள் பலருக்கும் பால், ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.பால் அமிர்தமா? வெள்ளை விஷமா?
*வேறொரு விலங்கின் பாலை வாழ்நாள் முழுவதும் ஒரு உணவுப் பொருளாக எடுத்துக் கொள்ளும் ஒரே உயிரினம் மனிதன் தான்.
*பெரும்பாலானவர்களுக்கு தயிர்,மோர் வடிவில் இல்லாமல் பாலாக 150 முதல் 200 மி.லிக்கு மேல் எடுத்துக்கொண்டால் ஜீரண பிரச்னைகள் ஏற்படுகின்றன.
*பாலில் இருக்கும் முக்கிய சர்க்கரை சத்து லேக்டோஸ். இந்த லேக்ட்டோஸை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் லேக்டேஸ் என்ற என்ஸைம் இருக்கிறது.
*மிகவும் குறைந்த அளவில் டீ,காபியை மட்டும் குடித்து வருவதால்,பால் ஒத்துக் கொள்ளுமா இல்லையா என்றே நமக்கு தெரிவதில்லை.65% மக்கள் இன்னமும் லேக்டேஸ் இன்டாலரன்ஸாகவே இருக்கிறார்கள்.
*பெரும்பாலான விலங்குகளில் 100 மில்லி பாலில் 65-67 கலோரிகள் இருக்கிறது. எருமைப்பாலில் இரண்டு மடங்கு அதாவது சுமார் 115 கலோரிகள் வரை இருக்கிறது.
*எருமைப் பால் குடித்துவிட்டு உடல் மந்தமாக இருக்கிறது என்று சொல்வதற்கு காரணம்,அதன் மூன்று மடங்கு அதிகமான கொழுப்பும் இரண்டு மடங்கு அதிகமான கலோரி சத்தும் தான்.
*இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு பாலை கொடுக்கக் கூடாது.
*பசும்பால்,ஒற்றை மாட்டுப் பால்,ஏ1,ஏ2, எதுவாக இருந்தாலும் இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு மாட்டுப் பால் வேண்டவே வேண்டாம்.
*முதல் ஒரு வருடத்தில் அது அமிர்தமாகவே இருந்தாலும் மனித உடல் மாட்டுப் பாலை ஏற்றுக்கொள்ளாது. லேக்டோஸ்இன் டாலரன்ஸ் இதற்கு முதல் காரணம்.
*தாய்ப்பால் குடிக்காமல் தினமும் அதிகமாக பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மலத்தில் ரத்தம் கலந்து வரலாம், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
*பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 150- 200 மில்லி பாலை எடுத்துக் கொள்ளலாம்.
*தயிர்,மோர் ஓரளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.தீவிர லேக்டேஸ் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு தயிர்,மோரை ஜீரணிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு.
*பாலை குடித்தவுடன் வயிறு பிரட்டுதல் தொடங்கி அதிக அளவில் ஏப்பமிடுதல்,வாய்வு வெளியேறுவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு லேக்டோஸ் இன் டாலரன்ஸ் இருக்கிறது என்று அர்த்தம்.இவர்கள் முடிந்த அளவுக்கு பாலைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.
*பாலில் ஏ1,ஏ3 என்று இரண்டு விதமாக விற்பனை செய்யப்படுகிறது. இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.விலை அதிகம்.இதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவை இல்லை.
*பாலில் சேச்சுரேடட் (Saturated) கொழுப்பு இருப்பதால் மாரடைப்பு ஏற்படலாம் என்று சொல்லப்பட்டது.இது உண்மை இல்லை. பாலில் இருப்பது நல்ல கொழுப்புகளே என்று உணவு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
*பால் குடிப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது. அதேபோல் பக்கவாதம்,சர்க்கரை நோய் ஆகியவற்றையும் பால் அதிகரிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.
*பாலை வெள்ளை விஷம் என்று சொல்வதிலும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று கூறுவதிலும் உண்மை இல்லை.
*பால் என்பது அத்தியாவசிய உணவா?என்று கேட்டால் அத்தியாவசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அது இல்லாமல் நாம் தாராளமாக உயிர் வாழலாம்.பாலில் கிடைக்கக்கூடிய அனைத்து சத்துகளும் நமக்கு மற்ற உணவுகள் மூலமாக தாராளமாக கிடைத்து விடுகின்றன.
*அசைவம் சாப்பிடுபவர்களுக்கு பால் கட்டாயம் இல்லை.
*சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு சிறிதளவு பாலை சேர்த்துக் கொள்வது சில முக்கிய சத்து குறைபாடுகளை தடுக்கும்.
*தயிர்,மோரை தினமும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை.
*பாலில் கலப்படம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
*கலப்படம் என்பது உள்ளூர் பிரச்னை இல்லை.தேசிய அளவிலேயே பெரிய அளவில் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
*பால் மிகப்பெரிய வணிகமயமாகிவிட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம்.
-பழ.குணசேகரன்,
ஹெல்த் அண்ட் பியூட்டி.

