
பிராய்லர் கோழிகளை ஊசி போட்டு வளர்க்கிறார்கள்.சாப்பிடக்கூடாது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.நான் வாரத்திற்கு இரண்டு முறை சமைக்கிறேன்.சாப்பிடக்கூடாதா?
-வி.அழகம்மை, இராமேஸ்வரம்.
100 கிராம் கோழிக்கறியில் சுமார் 27-30 கிராம் வரை புரதங்கள் உள்ளன.அதாவது 9 முக்கியமான அமினோ அமிலங்கள் இருக்கின்றன. 100 கிராமில் வெறும் 14 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் சுமார் 60 கிராம் புரதம் பிராய்லர் கோழி மூலம் கிடைக்க வேண்டும் என்றால் 200 கிராம் கோழிக்கறி எடுத்துக் கொண்டால் போதும்.எனவே பிராய்லர் கோழி போல புரதங்களை அளிக்கக்கூடிய உணவுகள் வேறு எதுவும் இல்லை. பருப்பு,பயறு வகைகளைவிட மிகக் குறைந்த விலையில் பிராய்லர் கோழியில் புரதம் கிடைக்கிறது. அதே நேரம் தரம் அதிகமாக உள்ள உணவாகவும் இதைச் சொல்லலாம்.
கோழிகளுக்கு ஊசி போடப்படுகின்றன… உண்மைதான்.அவை தடுப்பூசி மட்டுமே. குறைந்த விலையில் ஒரு குடும்பத்திற்கு தேவையான மொத்த புரதத்தை ஒரே வேளையில் தரக்கூடிய உணவு பிராய்லர் கோழி. அதைப்பற்றிய வதந்திகள் பெரும்பாலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டவையே. அதே நேரத்தில் சில இடங்களில் தவறான செயல்பாடுகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கண்காணித்து சரி செய்ய வேண்டிய பொறுப்பு கால்நடை மருத்துவர்கள், பண்ணை உரிமையாளர்கள், மற்றும் அரசுக்கும் இருக்கிறது.

