
பேராசிரியர் டாக்டர் உஷா ரவி,B.N.Y.S.,Ph.D.
டாக்டர் ஆர். பானுப்ரியா,B.A.M.S, M.D.(Acu)
ஆரோக்கியத்தை அள்ளி அள்ளித் தருகிற அமுதம் நம்மைச் சுற்றியிருக்கிறது. அதை கண்டுணர்ந்தவர்கள் அதனை சுவைத்து சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.உணர முடியாதவர்கள், மருத்துவமனைகளை இரண்டாம் வீடாக விரித்துக் கொண்டு மருந்து மாத்திரைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.நம்மைச் சுற்றி எட்டு திசைகளிலும் உடனடியாக கிடைக்கக்கூடிய நவதானியங்களைத்தான் அமுதம் என குறிப்பிடுகிறோம்.
நவம் என்றால் 9 . இந்த எண் தனித்துவமானது, மகத்துவமானது. நீண்ட ஆயுள், முழுமை மற்றும் நிறைவை குறிப்பிடுகிறது. அதனால்தான் தங்கம்,வெள்ளி பிளாட்டினம் போன்ற உலோகங்களின் தூய்மையை 999 என்று குறிப்பிடுகிறார்கள்.
நவக்கிரகம், நவரத்தினங்கள், நவராத்திரி, நவமணிகள் நவமங்கலங்கள் இந்த வரிசையில் அமைந்து அற்புதமான ஆரோக்கியத்தை தருகிறது நவதானியங்கள்.

நெல்,(அரிசி) கோதுமை,துவரை, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை,எள், உளுந்து,கொள்ளு ஆகிய ஒன்பதும் நவதானியங்களாகும். புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இவை உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன.
நம் முன்னோர்கள் நவ தானியங்களை அதிகளவில் உணவில் பயன்படுத்தியதால் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.ஆனால், இன்று மாறுபட்ட உணவுமுறைகளால் உடலில் சத்துகள் குறைந்து பெயர் தெரியாத நோய்களுக்கு ஆளாகி தவிக்கின்றனர்.
அரிசியில் 20 மில்லி அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. புழுங்கல் அரிசி நீரிழிவு நோய்களில் இருந்து காக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.சீரக சம்பா வாத நோய்களை போக்குகிறது.சிவப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. புத்தி கூர்மை, தெளிவு,மன அமைதி, உடல் உறுதியை உருவாக்குகிறது.
கோதுமையில் புரதம், பாஸ்பரஸ், கரோட்டின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோதுமை உணவுகள் உதவுகின்றன.உடல் எடையை குறைக்கவும்,கப பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகின்றன.உடல் பலம்,ஆற்றல் மற்றும் ஆரோக்கியமான சருமத்தை தருகிறது.
துவரம் பருப்பில், புரதச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, அமினோஅமிலங்கள் நிறைந்துள்ளன. உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அலர்ஜி வராமல் இருக்கவும்,உடலில் ஏற்படக்கூடிய காயங்கள்,வலிகளை சரி செய்யவும் உதவுகிறது.இதய நோய் பிரச்னைகளை சரி செய்யும்,ரத்த சோகையை குறைத்து,நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
எள்ளில் கால்சியம், இரும்பு,மெக்னீசியம், வைட்டமின் பி1, வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன. உடலில் ரத்தத்தை அதிகரிக்கிறது,ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது.சருமம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளையும் சரி செய்கிறது.
உளுந்தம் பருப்பில், தாது உப்புகள், நார்ச்சத்து,கால்சியம் நிறைந்துள்ளன. உடல் சூட்டை தணிக்கிறது.இடுப்பு வலு பெறவும்,இடுப்பு வலியை சரி செய்யவும் பயன்படுகிறது. எலும்பு,தசை, நரம்புகளுக்கு மிகச் சிறந்த தானியம். கருப்பு உளுந்தில் களி செய்து சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பாசிப்பயறில், பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளது. நினைவுத்திறன் பாதிப்பு,மலச்சிக்கல், பித்தம்,மூலம் போன்ற பிரச்னைகளை சரிசெய்கிறது. கோடைக்காலங்களில் ஏற்படக்கூடிய சின்னம்மை, பெரியம்மை தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எளிதில் செரிமானம் ஆகக்கூடியது,உடல் சூட்டைக் குறைத்து, குடலைப் பலப்படுத்துகிறது.
கொண்டைக்கடலையில் கால்சியம், இரும்புச்சத்து, புரோட்டீன், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு கை கொடுக்கிறது. மார்பகப் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.ரத்த சோகையை நீக்கி உடலை உறுதியாக்குகிறது.
மொச்சையில், மினரல்,நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் நிறைந்துள்ளது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி அணுக்கள், திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. புற்றுநோய் வராமல் காக்கிறது.குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்னையை சரி செய்கிறது.
கொள்ளில் தாது உப்புகள்,பாஸ்பரஸ், மினரல், இரும்புச்சத்து, மாவுச்சத்துகள் நிறைந்துள்ளன. கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது.சிறுநீரக கற்களை கரைக்கிறது. சர்க்கரை நோயை சரி செய்கிறது.
நவராத்திரி பண்டிகையின் போது,ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நவதானியத்தைச் சுண்டலாகச் செய்து இறைவனுக்குப் படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
உணவின் கட்டுமானம் தான் உடல்.சரியான கட்டுமானத்திற்கு சரியான உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். அதற்கு நவதானிய உணவுகள்
நமது உணவு முறையில் முக்கால் பாகம் காரத்தன்மையுடனும் கால் பாகம் அமிலத்தன்மையுடனும் இருக்க வேண்டுமென நவீன மருத்துவ அறிவியல் கூறுகிறது. காரச்சத்து என்பது புரதச்சத்தையும் அமிலச்சத்து என்பது கார்போஹைட்ரேட்டையும் குறிப்பிடுகிறது. இந்த உணவு விகிதத்தை நவதானிய உணவுகள் வழங்கி சரியான உடல் கட்டுமானத்தை பாதுகாக்கின்றன. அதன்படி நம் முன்னோர்களின் தொன்மையான வாழ்வியல் நெறிகளை பின்பற்றி நவதானிய உணவுகளை கடை பிடித்தால் முழு ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் மகிழ்ச்சியோடு வாழலாம்.
நவதானியங்களில் இடம் பெற்றுள்ள பருப்பு வகைகளில் அவரவரின் சுவைக்கேற்ப முளைக்க வைத்தோ, காய்கறிகளுடன் சேர்த்தோ கூட்டுபதார்தங்களாகவோ,சமைத்தோ உண்ணலாம். இவற்றில் பயிறு அளவிற்கு தேங்காய் துருவல் சேர்த்துக் கொண்டால் சுவையாகவும்,சத்து நிறைந்தும் அமைந்திருக்கும். இதன் மூலம் எவ்வித மருந்து மாத்திரையுமின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
நவதானிய உணவு முறையை வாழ்வியல் முறையாக மாற்றிகொள்ள வேண்டும். நவதானிய சுண்டல்கள், நவதானிய மாவு மற்றும் நவதானிய உணவு,நவதானிய மருந்து பொருள்கள் தயாரிக்க சுசான்லி நிறுவனத்தின் மூலம் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் இதற்கென்றே சுசான்லி நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த உணவு நிபுணர்கள் உள்ளனர். நோய்களுக்கு தீர்வாகவும் தேவைப்படும் சத்துகளுக்குரிய நவதானிய உணவு பொருட்கள் குறித்தும் சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்,
எண்:11, பாரதிதாசன் தெரு ,
பிள்ளையார் கோயில் எதிரில் ,
மஞ்சக்குப்பம்,
கடலூர்- 607 001
செல் 93676 22256.

