
வயது 45.ரொம்பகாலமாக மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்பட்டு வருகிறேன்.ஏராளமான சிகிச்சை எடுத்து அலுத்து விட்டது.எனக்கு எப்போது மெனோபாஸ் வரும் என்று கண்டுபிடிக்க முடியுமா? –எஸ்.பார்வதி, கடலூர்.
ஒரு பெண்ணுக்கு மிகச் சரியாக இந்த வயதில் தான் மெனோபாஸ் வரும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. ஆனாலும்,சில விஷயங்களை வைத்து தோராயமாக அதை ஓரளவு கணிக்க முடியும்.
ஒரூ பெண்,தன் அம்மாவுக்கு எந்த வயதில் மெனோபாஸ் வந்தது என்பதை வைத்து தன்னுடைய மெனோபாஸ் வயதையும் அதே வயதில் எதிர்பார்க்கலாம். அது கிட்டத்தட்ட சரியாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியமற்ற டயட்,புகைப்பழக்கம் உள்ளிட்ட வாழ்வியல் காரணங்கள்கூட மெனோபாஸ் வயதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பங்களைச் சுமந்த பெண்ணுக்கு மெனோபாஸ் சற்று தாமதமாகலாம்.
ஏஎம்ஹெச் (Anti-Mullerian hormone) அளவுகள்…
‘ஏஎம்ஹெச்’ எனப்படும் ‘ஆன்டிமுலேரியன் ஹார்மோன்’ டெஸ்ட்டின் மூலம் சினைப்பையில் எத்தனை கருமுட்டைகள் இருப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.இந்த இருப்பை வைத்து அந்தப் பெண் மெனோபாஸுக்கு முந்தைய பெரிமெனோபாஸ் நிலையில் இருக்கிறாரா, மெனோபாஸ் நிலையில் இருக்கிறாரா என்பதை மருத்துவர் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

