
டாக்டர் சாலா மாணிக்கராஜ், உளவியல் நிபுணர்.
டீன் ஏஜ் பிள்ளைகளை தற்போது வளர்ப்பது என்பது சாதாரணமாக இல்லை.கடும் சவாலாக இருக்கிறது.
முன்பைவிட கடுமையாக படிக்கிறார்கள்.படிப்புச் சுமையும் அதிகம்.
அவர்களுடன் எந்த வித மன இறுக்கமும் இல்லாமல் இயல்பாக பேசுங்கள்.பிள்ளைகளை பேச தூண்டுங்கள்.
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கான எல்லா முடிவு களையும் எடுப்பதில், பெற்றோருக்கு என்னவோ அலாதி ஆசை.ஆனால்,அது அவர்களது சுதந்திரத்தைப் பாதிக்கும்.சரியான முடிவெடுப்பது என்பது பயிற்சிகளின் மூலம்தான் கைவரும்.
தோல்விகள் வெற்றிக்கு படியாக அமையும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள அவர்களது முடிவுகளை அவர்களே எடுக்க அனுமதியுங்கள். சிலது சரியாக இருக்கும்.பலது தவறாக இருக்கலாம். தவறுகள்தான் அவர்களுக்குப் பாடம் கற்றுத்தரும். தவறுகள் பெரிதாக அவர்களை பாதிக்காத வரை அவர்களை,தவறு செய்து அதன் மூலம் கற்றுக்கொள்ள விட்டு விடுங்கள். செய்த தவறுகளை விமர்சிக்காதீர்கள். சரியான முடிவுகளைப் பாராட்டுங்கள். போகப்போக அவர்கள் தம் பலவீனங்களை உணர்ந்து ஆலோ சனை கேட்பார்கள்.
இந்த இக்கட்டான பருவத்தில் உங்கள் பிள்ளைகளை விட்டுப் பிடித்து சமாளிக்க இன்னும் சில டிப்ஸ்:
*உடைகளை நீங்களே தேர்வு செய்வதைத் தவிர்த்து,பணத்தை அவர்களிடம் கொடுத்து,வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள். அவர்கள் விருப்பப்படி ஹேர்கட் செய்து கொள்ள அனு மதியுங்கள்.அது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால்,அது குறித்து வரும் விமர்சனங் களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்பதை அவர்கள் உணர இது உதவும்.
*எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் சொல்லாமல், அவர்களிடமே கேளுங்கள்.எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
*பிள்ளைகளுக்குப் பொறுப்புகளை, சுதந்திரத்தைக் கொடுப்பது எத்தனை அவசியமோ,அதே அளவு அவர் களுக்கான இடைவெளியையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
*பிள்ளையின் அந்தரங்கத்துக்கு மதிப்பளியுங்கள். அவர்களது அறைக்குள் நுழைவதற்கு முன் கதவைத் தட்டுங்கள்.
உங்கள் மகள் அல்லது மகனின் டைரியை படிப்பது, இமெயிலை பார்ப்பது, தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட் பதையெல்லாம் தவிருங்கள்.
*உங்கள் குழந்தையின் விருப்பங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக் காமல் நீங்கள் டீன் ஏஜில் இருந்தபோது சந்தித்த அதே பிரச்னைகளை நினைவு கூருங்கள்.
*உங்கள் குழந்தையின் பிரச்னைகளையும் குழப்பங்களையும் உங்கள் பிள்ளைகளின் அனுமதியின்றி, யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நம்பிக்கை என்பது தகர்ந்து விட்டால், அதைத் திரும்ப உருவாக்குவது மிகவும் சிரமம்.
*உங்களுக்குக் கொஞ்சமும் புரியாத இசையை பிள் ளைகள் ரசிக்கிறார்களா? தடை போடாதீர்கள். அந்த வயதில் அவர்களது நண்பர்கள் எதையெல்லாம் ரசிக் கிறார்களோ, அதையேதான் உங்கள் பிள்ளைகளும் பின் பற்றுவார்கள்.காலப் போக்கில் அவர்களது விருப்பங்கள் தாமாக மாறும்.அதனால் என்னவோ உங்கள் கலாசாரமே சீரழிந்து விடும் என்ற அளவுக்கு சிந்திக்காதீர்கள்.
*டீன் ஏஜ் பிள்ளைகளால் நீங்கள் அடிக்கடி தர்மசங்கடத்துக்குத் தள்ளப்படுவீர்கள். எல்லா விஷயங்களுக்கும் உங்களை சார்ந்து இருக்க வேண்டும் என்கிற நிலையிலும்… தன்னை தனி மனிதனாகவோ மனுஷியாகவோ காட்டிக் கொள்வதைத் தான் அந்த வயதில் விரும்புவார்கள்.அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
*இந்தக் குழப்பமான பருவத்தில் சுதந்திரமும் வேண்டும்,பெற் றோரின் அன்பும் ஆதரவும் வேண்டும் என நினைப்பார்கள். உங்கள் அன்பை எதிர்பார்ப்பார்கள். அதே வேளை அதை வெளிப்படுத்தும் வழியாக அத்தனை நாள்களாக நீங்கள் கடைப்பிடித்த கட்டிப்பிடி வைத்தியத்தை விரும்ப மாட்டார்கள்.
*குழந்தைகளாகவே பார்க்காமல், அவர்களை உங்களுக்கு சமமான தனிமனிதர்களாகப் பாருங்கள்.அரசியல் தொடங்கி, விலைவாசி வரை எல்லாமும் பேசுங்கள். அவர்களது அபிப்ராயங்களை அலட்சியம் செய்யாதீர்கள்.
*டீன் ஏஜை கடப்பது என்பது அவர்களுக்குமே மிக மிக இக்கட்டானதுதான். முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.எதைப் பற்றியாவது உங்களிடம் பேச நினைத்தால்,நேரம் ஒதுக்கி,காது கொடுத்துக் கேளுங்கள்.உங்கள் சொல்பேச்சைக் கேட்காமல், உங்களுக்கு உடன் பாடில்லாத விஷயங்களை அவர்கள் செய்கிற போது,அமைதியாக இருங்கள். அவர்களுக்கு தீங்கு விளைவிக்காத எல்லைக்குட்பட்டு, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கட்டும்.
*வீடு என்பது அவர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான ஒரு இடம் என்கிற சூழலை உருவாக்குங்கள். உங்கள் அபரிமி தமான அன்பும் ஆதரவும் அதை அவர்களுக்கு உணர்த்தும்.

